உணவளித்தவர் மரணம்… கையை பிடித்து முத்தமிட்டு தேம்பி தேம்பி அழுத குரங்கு : நெஞ்சை உலுக்கும் வீடியோ!!

1259

இலங்கை..

இலங்கையின் தாளங்குடா பிரதேசத்தை அடுத்த மட்டக்களப்பு என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பீதாம்பரம் ராஜன் (வயது 56). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, சமீப காலமாக அங்கே காட்டில் இருந்து வந்த குரங்கு ஒன்றிற்கு வழக்கமாக அவர் உணவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பீதாம்பரம் வீட்டிற்கு அந்த குரங்கு வருவதாக தகவல் தெரிவிக்கும் நிலையில்,

பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை அவர் கொடுத்து வந்துள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில், திடீரென பீதாம்பரம் ராஜன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


இந்த சம்பவம், அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. பீதாம்பரம் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், ஏராளமானோர் அங்கே சூழ்ந்திருந்தனர்.

அப்போது வழக்கம் போல, அந்த குரங்கு தனக்கு உணவளிக்கும் பீதாம்பரத்தை தேடி வந்துள்ளது. ஆனால், அங்கே அவர் உயிரிழந்து கிடப்பதை அறிந்து வேதனையில் உடல் அருகே இருந்துள்ளது.

அது மட்டுமில்லாமல், அவரது உடலை தொட்டு பார்த்தும், உடலை எழுப்ப பல்வேறு முயற்சிகளையும் அந்த குரங்கு மேற்கொண்டுள்ளது. பீதாம்பரத்திற்கும் முத்தம் கொடுத்துள்ளது அந்த குரங்கு.

ஆனாலும் பீதாம்பரம் எழாமல் இருந்ததால் குரங்கு சோகத்தில் இருந்துள்ளது. மேலும், மற்ற சிலர் குரங்கை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தும் எழுந்து செல்லாமல் பீதாம்பரம் உடல் அருகேயே இருந்தது.

இன்றைய காலகட்டத்தில், மனிதர்கள் மத்தியில் ஏராளமான போட்டிகள் இருக்கும் அதே வேளையில், கொஞ்ச நாள் உணவு வழங்கி அன்பு செலுத்தியதாக இத்தனை சோகத்துடன் குரங்கு அஞ்சலி செலுத்திய விதம், தற்போது இணையவாசிகள் பலரையும் மனம் உடைய வைத்துள்ளது.