கண்ணை மறைத்த ஓரின காதல்… 3 குழந்தைகளின் தாய் செய்த செயல் : கணவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

1041

சேலம்…

சேலம் கொண்டலாம்பட்டி அரச மரத்து காட்டூர் பகுதியை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. இவர் ஒரு வெள்ளி தொழிலாளி… மனைவி பெயர் தேவி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது).

25 வயதாகிறது.. கல்யாணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது.. ஆனால், இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.. இவரது பக்கத்து விட்டில் வசித்து வந்தார் ரம்யா.. (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இவருக்கும் கல்யாணமாகிவிட்டது.. 3 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. கணவன், குழந்தைகளுடன் ஒன்றாக வசித்து வருகிறார் ரம்யா.. 30 வயதாகிறது..

பக்கத்து வீடு: பக்கத்து பக்கத்து வீடு என்பதால், ஆரம்பத்தில் தேவியும் – ரம்யாவும் நட்பாக பழகினார்கள்.. 2 பேரின் கணவர்களும், வேலைக்கு போய்விட்டால், இந்த 2 மனைவிகளும், ஒன்றாக பேசிக்கொண்டிருப்பது வழக்கம்… அப்போது, 2 பேருமே தங்கள் வீட்டு விஷயங்களையும், பிரச்சனைகளையும் ஒளிவுமறைவின்றி பகிர்ந்து கொள்வார்கள்..


சிலசமயம், இவர்களின் நெருக்கத்தை கணவன்மார்கள் பார்த்தாலும்கூட, எதுவும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். 2 பெண்களும் இவ்வளவு அன்பாக பழகுகிறார்களே என்று நினைத்து கொள்வார்களாம்..

இந்நிலையில், தேவி, வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு சென்றார்., உடனே ரம்யாவும் அவருடனேயே வேலைக்கு சென்றுவிட்டார்.. வேலைக்கு போனாலும் சரி, வீட்டுக்கு வந்தாலும் சரி, 2 பேரும் எந்நேரமும் நெருக்கமாகவே இருந்தனர்.

ரம்யா தடுமாற்றம்: இதனால், ரம்யாவின் 3 குழந்தைகளும் அம்மாவின் அன்பு கிடைக்காமல் ஏங்கின.. வீட்டிலேயே தங்காமல், எந்நேரமும் தேவி வீட்டுக்கே சென்று கொண்டிருந்தார் ரம்யா.. இவர்களின் 2 பேரின் நட்பும், லெஸ்பியன் உறவாக மாறியது… அடிக்கடி ஊர் ஊராகவும் சுற்ற தொடங்கினர்..

இவர்களது நெருக்கம், நாளடைவில், அவரவர் கணவன்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்த துவங்கியது.. இறுதியில் கையும் களவுமாகவே 2 பேரும் சிக்கினார்கள். இதனால், இருவீட்டிலும் மனைவியை கண்டித்தனர்… ஆனாலும் 2 பேரும் கேட்கவில்லை..

இதனால் ரம்யாவின் கணவர் வீட்டை காலி செய்து கொண்டு, திம்மநாயக்கன்பட்டிக்கு குடிபெயர்ந்தார்… இதையடுத்து, கடந்த 3-ந் தேதி தேவி திடீரென வீட்டிலிருந்து மாயமானார்.. அவரது கணவர் பல இடங்களில் தேடியும் தேவி கிடைக்கவில்லை.. அப்போதுதான் பெட்ரூமில் ஒரு கடிதம் கிடைத்தது.. அந்த கடிதத்தை தேவியே தன் கைப்பட எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்துடன் தாலியும் கிடந்தது.

தாலி கடிதம்: அந்த கடிதத்தில், “எனக்கு என் கணவருடன் வாழ பிடிக்கவில்லை. அதனால் தான் தாலியை கழட்டி வைத்திருக்கிறேன்… நான் எனக்கு பிடித்த ரம்யாவுடன் செல்கிறேன்.. என்னை யாரும் தேட வேண்டாம்” என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் கொண்டலாம்பட்டி போலீசுக்கு ஓடினார்.. நடந்த விஷயத்தை சொல்லி, கடிதத்தையும் ஒப்படைத்தார்.. இதையடுத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தேவியை தேடி வந்தனர்..

இந்த நேரத்தில், ரம்யாவையும் காணவில்லை.. அவரும் அவரது வீட்டில் இருந்து மாயமாகி இருந்தார்.. அவர் கணவரும் போலீசுக்கு ஓடிச்சென்று புகாரை தந்தார்.. இப்போது ஒரே நேரத்தில் மாயமான தேவி – ரம்யா இருவரையும் தேடும் பணி ஆரம்பமானது.. தனிப்படை போலீசும் அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியது.. அப்போதுதான், இவர்கள் 2 பேரும் ஏற்கனவே ஊரை விட்டு ஓடிப்போனவர்கள் என்பது தெரியவந்தது..

புத்திமதி: ஏற்கனவே இருவரும் ஓடிப்போய், அவரவர் கணவன்கள் தேடியலைந்து, அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.. அவரவர் மனைவிக்கு புத்திமதியை சொல்லியிருக்கிறார்கள்.. குழந்தைகளின் எதிர்காலத்தையாவது பாருங்கள் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.. வீட்டை மாற்றினாலாவது, மனம் மாறும் என்று நினைத்துதான், வீட்டை வேறு இடத்துக்கு குடிமாற்றினர்..

அப்போதும்கூட, இவர்கள் 2 பேரும் ஊரைவிட்டு ஓடிப்போயுள்ளனர்.. இதெல்லாம் விசாரணையில் தெரியவந்துள்ளது.. மீண்டும் அவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டு ஓட்டம் பிடித்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்போது அவர்கள் 2 பேரும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. எங்கிருந்தாலும், அவர்கள் மீட்கப்படுவார்கள் என்று போலீசார் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்..

ஓரின காமம்: மற்றொருபுறம் 2 கணவன்களுமே ஆளுக்கொரு பக்கம், தங்கள் மனைவிகளை தேடி கொண்டிருக்கிறார்கள்.. ஓரின காமத்தினை நினைத்து, இரு குடும்பத்தினரும் கலங்கி கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை சேலத்தில் ஏற்படுத்தி வருகிறது.. இருந்தாலும், அந்த 3 பிஞ்சு குழந்தைகளின் முகத்தையாவது, ரம்யா கொஞ்சம் நினைத்து பார்த்திருக்கலாம்..!!!

ஆனால், காதலுக்கு பாலின பேதங்கள் கிடையாது என்றாலும், இந்த நவீன யுகத்திலும் பல்வேறு தரப்பினருக்கு சிக்கலுக்குரியதாக இருக்கிறது. ஆண் – பெண் காதலுக்கு எப்படி இருக்கிறதோ, அதைவிட அதிகமாக, தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல்களுக்கும் மிகப்பெரிய எதிர்ப்புகள் இருந்து கொண்டுதான் வருகிறது…

“ஓரினச்சேர்க்கையாளர்களும் பாலியல் ரீதியாக சாதாரண மனிதர்கள்தான். இது ஒரு பிறழ்வு அல்லது நோய் அல்ல என்றும், ஓரினச்சேர்க்கையாளர்களையும் நாட்டின் சாமானியர்களைப் போல நடத்த வேண்டும்” என்றும் இந்திய மனநல மருத்துவர் சங்கம் (ஐபிஎஸ்) சமீபத்தில் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.