கல்யாணம்னு நினைச்சாலே கசக்குது.. 40 வயதை தாண்டியும் ஒண்டிக்கட்டையாக இருக்கும் 9 டாப் நடிகைகள்!!

166

நடிகைகள்..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகைகளாக இருந்த சிலர் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தும் சொந்த வாழ்க்கையில் திருமணமே வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள். அது யார் யார்? என்ன காரணத்திற்காக அவர்கள் திருமணத்தை வேண்டாம் என ஒதுக்குகிறார்கள் என இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மும்தாஜ்:

தென்னிந்திய சினிமாவில் நடிகை மும்தாஜ் பல படங்களில் நடித்து வந்தவர். இவர் டி ராஜேந்தரின் மோனிஷா என் மோனலிசா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிய மும்தாஜ், பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு பிரபலமானார். இடையில் வாய்ப்பில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, அதன்பின்பும் வாழ்க்கையில் செட்டினாலாலும் சினிமாவில் நல்ல வரவேற்பு இல்லாமல் இருக்கிறார். இதனால் 42 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சித்தாரா:


நடிகை சித்தாரா 80களில் கொடிக்கட்டி பறந்த தென்னிந்திய நடிகை. இவர் புதுபுது அர்த்தங்கள் படத்தில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், சித்தாரா தற்போது அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வெறுத்து ஒதுக்கி வருவதற்கு காரணம் இளம் வயதில் ஏற்பட்ட காதல் தோல்வி என்று கூறப்படுகிறது.

தபு:

நடிகை தபு பாலிவுட் நடிகையாக தற்போது வரை முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இவர் அஜய் தேவ்கனுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பின் மனவேதனையில் இருந்து வந்தார். இவர் தற்போது 51 வயதாகியும் திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக இருக்கிறார்.

நக்மா:

நடிகை நக்மா 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி. இவர் தற்போது 53 வயதை எட்டியும் திருமணம் செய்யாமல் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். நடிகை நக்மா பல பிரபலங்களுடன் ஆரம்ப சினிமா வாழ்க்கையில் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். பின்னர் தன் சகோதரி ஜோதிகாவின் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டும், குழந்தைகளை பராமரித்தும் வருகிறாராம்.

ஷோபனா:

தமிழ், தெலுங்கு , இந்தி என பல மொழி படங்களில் நடித்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக இடத்தை தக்கவைத்திருந்தவர் நடிகை ஷோபனா. இவர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். 53 வயதாகும் ஷோபனா இதுவரை திருமணம் செய்யாமல் வாழ்க்கையை வீணடித்துவிட்டார். காரணம் கேட்டதற்கு, எனக்கு டைம் இல்லை. நான் ரொம்ப பிசியாக இருப்பதால் திருமணம் செய்துக்கொண்டு வாழ்வதற்கு நேரமில்லை என பேட்டி ஒன்றில் கூறினார். ஆனாலும் இவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது குறிப்பிடதக்கது.

கௌசல்யா:

அழகு புதுமையான, அமைதியான , பவ்யமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கௌசல்யா. தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். பெங்களூரில் பிறந்த இவர் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்தும் திருமணமே எனக்கு வேண்டாம் என கூறி நிராகரித்துவிட்டார். தற்போது இவருக்கு வயது 43 என்பது குறிப்பிடத்தக்கது.

சதா:

தமிழ் யின்மாவில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை சதா. இவர் ஜெயம், எதிரி , அந்நியன், உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நினைத்திருந்தால் டாப் ஹீரோ யாரையேனும் காதலித்து திருமணம் செய்திருக்கலாம்.ஆனால் திருமணம் செய்தால் சுதந்திரமாக வாழமுடியாது என கூறி திருமணமே செய்துகொள்ளவில்லை. சதாவிற்கு இப்போ வயசு 40 எனபது குறிப்பிடத்தக்கது.

கிரண் ரதோட் :

90ஸ் ரசிகர்களின் பேவரைட்ஹீரோயின் ஆன நடிகை கிரண் ரதோட் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர், திருமலை, ஆம்பள உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கவர்ச்சியை வாரி வாரி இறைத்து நடித்து வந்ததால் இதுவரை திருமணம் செய்துகொள்ளும் அளவிக்ரு யாரும் முன்வரவில்லை. தற்போது 42 வயதாகும் கிரண் ரதோட் கவர்ச்சி காட்டி தனி ஆப் ஒன்றை வைத்து லட்ச கணக்கில் வருமானம் சம்பாதித்து வருகிறார்.

திரிஷா:

நடிகை திரிஷா வெயிட்டான மாப்பிள்ளை யாரேனும் பார்த்து திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிடலாம் என நினைத்து பிரபல தொழிலதிபர் வருண் என்பவரை நிச்சயம் செய்தார். ஆனால், ஜாதகப்படி திரிஷா திருமணம் செய்துக்கொண்டால் அவருக்கு மார்க்கெட் இழந்துவிடும் என ஜோசியர் கூறியதால் அந்த திருமணத்தை நிறுத்திவிட்டு இன்று வரை திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார். தற்போது திரிஷாவுக்கு வயது 40 ஆகிறது.