குடிக்க ஆரம்பிச்சா எக்ஸ்ட்ரீம்க்கு போயிடுவேன்.. அட்ஜஸ்ட்மென்ட் குறித்து மனம் திறந்த ஓவியா!!

204

ஓவியா..

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியா தான் ஒன்றும், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவள் இல்லை என்றும், சரக்கு எல்லாம் தான் சின்ன வயதிலேயே அடித்து முடித்து விட்டதாகவும், எதுவாக இருந்தாலும் அதன் எக்ஸ்ட்ரீமை பார்த்து விடுவேன்.


இப்போது சரக்கு எல்லாம் போர் அடித்துவிட்டது என்றும், மேலும் அவர் கூறுகையில் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கு நிறைய பேரு அப்படி பண்ணுவாங்க அதெல்லாம், பண்ணி இருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் பெரியாளாக மாறனும் என்ற ஆசை இல்லை என்று ஓவியா வெளிப்படையாக பேசியுள்ளார்.