தனது வீட்டில் உள்ளவர் வைரஸ் தாக்கியதில் இறந்த சோகத்தில் நடிகை அனுபமா எச்சரிக்கை.!

860

நிவின் பாலியின் ‘பிரேமம்’ எனும் மலையாள திரைப்படத்தில் தனது நடிப்பால் புகழ் பெற்ற நடிகை அனுமபமா பரமேஸ்வரன், பல மொழிகளில் பல படங்களை செய்து வருகிறார்.

அவர், தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் கவனம் பெற்றார்.

தற்போது, ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ‘தள்ளிப் போகாதே’ எனும் திரைப்படத்தில் நடிதுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

கொரோனா வைரஸ் பூட்டுதலின் போது அனுபமா தனது அன்றாட வழக்கத்திலிருந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகிறார்.


அவர் தற்போது, தனது செல்லப்பிராணிகளின் வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துபோனதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் ரம், டாடி மற்றும் விஸ்கி என மூன்று செல்லப்பிராணிகளை வளர்த்துவந்தார். அதில், ரம் மற்றும் டாடி எனும் இரண்டு நாய்க்குட்டிகளும் பார்வோவைரஸுக்கு பலியானது.

அதைப்பற்றி பேசும் வீடியோவை வெளியிட்ட அவர், வைரஸைப் பற்றி கவனமாக இருக்கவும், அத்தகைய வைரஸிலிருந்து தங்கள் செல்லப்பிராணிகளை கவனித்துக் கொள்ளவும் அவர் தனது ரசிகர்களிடம் கூறினார்.