திருமணமான மூன்றே நாட்களில் விரக்தியில் கணவரை கல்லால் அடித்து கொன்ற புதுமனைவி : நடந்தது என்ன?

276

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு குக்கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா. நல்ல கட்டழகி. சிவந்த நிறம். எடுப்பான உடல்வாகு. லலிதாவை பார்க்கும் எந்த ஆணுக்கும் மீண்டும் ஒரு முறை அவரை திரும்பப் பார்க்கத் தூண்டும்.

வயது 23. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். வரதட்சணை கொடுக்க வழியில்லாமல் பக்கத்து ஊரைச் சேர்ந்த சேல்ஸ்மேன் ரவிக்கு லலிதாவை அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். ரவிக்கு வயது 38.

வறுமை காரணமாக வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணத்தை நடத்த வேண்டியதாகிவிட்டது. ரவிக்கும் லலிதாவுக்கும் திருமணமாகி அன்று முதலிரவு. ஆனால் வீட்டுக்கு நள்ளிரவுக்கு மேல் வந்த ரவி கடும் போதையில் இருந்தார்.

திருமணத்தன்று நிறைய வேலைகள் இருந்ததால் உடல் அலுப்பாக இருந்தது எனக் கூறி உடனே போய் படுத்துவிட்டார். பல நாள் ஆசையுடன் ஏக்கத்தில் இருந்த லலிதாவுக்கு இது பெரும் ஏமாற்றமாகி விட்டது.


மறுநாள் இரவும் ரவி தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்துள்ளார். அன்றும் லலிதாவை ஏறெடுத்தும் பார்க்காமல் வெளியில் போய் தூங்கி விட்டார். இரண்டாவது நாளாகவும் லலிதாவுக்கு ஏமாற்றம்.

அடுத்த நாள் இரவும் அதே கதை. ஆனால் அன்றைக்கு ரவியை தனது படுக்கையறையில் படுக்க வைத்து அவரது ஆசையை தூண்டிவிட முயன்றார் லலிதா. இருப்பினும் ரவி தூங்குவதிலேயே குறியாக இருந்தார். நள்ளிரவு தாண்டியது. ரவியிடம் இருந்து எந்த மாற்றமும் இல்லை.

அதிகாலையில் மீண்டும் ரவியை தூண்டுவதற்காக தனது ஆடைகளைக் களைந்துவிட்டு அவரது அருகில் வந்து படுத்தார் லலிதா. அசையாமல் படுத்திருந்த ரவி மீது புரண்டு படுத்து கட்டியணைத்தார். ஆனால் ரவியோ கோபமாக லலிதாவை தள்ளி விட்டார்.

பின்னர் எழுந்து உட்கார்ந்த லலிதா ஆடையை உடுத்திக்கொண்டு வெகுநேரம் யோசித்தபடி இருந்தார். திடீரென ஆவேசமான லலிதா சமையலறைக்குள் சென்று அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து வந்து ரவியின் தலையில் திரும்பத்திரும்ப ஓங்கி அடித்தார்.

இதில் அலறித் துடித்த ரவி ரத்த வெள்ளத்தில் இறந்து போனார். குடும்பத்தார் ஓடிவந்து பார்த்துவிட்டு போலீஸாருக்குத் தகவல் தந்தனர். அங்கு வந்த போலீஸார் லலிதாவை கைது செய்து கொண்டு சென்றனர். இந்த சம்பவம் உண்மை. ஆனால் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

லலிதாவின் இந்த கோபத்துக்கு காரணம் என்ன என்று உளவியல் நிபுணர்களிடம் கேட்டபோது, பருவ மங்கையான லலிதாவின் பாலுணர்வு வேட்கையை ரவி தணிக்காததே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்றனர்.

போலீஸார் விசாரணையில் ரவிக்கு ஆண்மையில்லை என்றும் அதை மறைத்து லலிதாவை திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதுபற்றி நிபுணர்கள் மேலும் கூறுகையில், பொதுவாக புதிதாகத் திருமணம் செய்பவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் முதலிரவைக் கொண்டாடுவார்கள். ஆனால் ஆண்மையில்லாத காரணத்தினால் லலிதாவை ரவி ஏமாற்றி விட்டார்.

இந்த துரோகத்தை லலிதாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இல்லற சுகம் கிடைக்காவிட்டால் லலிதாவால் என்ன செய்ய முடியும். இப்போதெல்லாம் மணமக்கள் தங்களது உடல்நிலை பற்றி திருமணத்துக்கு முன்னரே விசாரித்துத் தெரிந்து கொள்கின்றனர்.

இது சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரின் கடமையும் ஆகும். ஆண்மையை இழந்தவர்கள் அதை தெரிவித்திருக்க வேண்டும். மறைத்து திருமணம் செய்தது குற்றமாகும். வீணாக வாழ்க்கையை இழந்த லலிதாவின் எதிர்காலம் சிறைச்சாலையில் முடிந்து விட்டது. எனவே திருமணத்துக்கு முன்னதாக இருதரப்பும் தீர விசாரித்துக் கொள்வது எல்லாருக்கும் நல்லது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.