துப்பாக்கிச்சூட்டில் பெண் என்ஜினியர் பலி.. தொடரும் வன்முறை கலாச்சாரம்!!

264

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பள்ளிக்கூடங்கள், கேளிக்கை விடுதிகள், மால்களில் துப்பாக்கியுடன் புகுந்து சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தகின்றனர். அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பள்ளி குழந்தைகள் அப்பாவி மக்கள் இதில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டெல்லெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் மாலையில் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிகவளாகத்தில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது 33 வயதான மவுரிஹொ ஹர்சியா என்பது தெரியவந்தது. இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 8 பேரில் ஒருவர் இந்தியாவின் ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் என்பது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சரோர்நகர் பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா தடிகொண்டா (27), டெக்சாசில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.


ஐஸ்வர்யா தனது ஆண் நண்பருடன் டெல்லெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு சென்றபோது அங்கு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஐஸ்வர்யா மீது தோட்டா பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டில் ஐஸ்வர்யாவின் ஆண் நண்பரும் படுகாயமடைந்தார்.

துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த பெண் என்ஜினியர் ஐஸ்வர்யா உயிரிழந்த நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என அவரது பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.