பச்சிளம் குழந்தையை தூக்கில் தொங்கவிட்ட இளம் தாய்!!

1075

சத்தீஷ்கர் மாநிலத்தில் கோர்பார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அக்ஷய்குமார் (வயது 28) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பெயர் ராகினி. இவருக்கு வயது 25. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி ஆண் குழந்தை ஒன்று உள்ளது. சனிக்கிழமையான நேற்றைய தினம் நீண்ட நேரமாகியும் அவரது வீட்டு கதவு திறக்கப் படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அவள் வீட்டுக்கதவை நீண்ட நேரமாக தட்டி பார்த்துள்ளனர்.

நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் அவர்களுக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்பொழுது போலீசார் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

உள்ளே சென்று பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆஷிக் குமாரின் வீட்டிற்குள் மூன்று பேரும் சடலமாக தூக்கில் தொங்கி இருந்தனர். இதனை பார்த்து போலீசார் அதிர்ந்து போயினர்.


இதனை தொடர்ந்து மூவரது உடல்களையும் போலீசார் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். வழக்கின் விசாரணையில், சம்பவ தினத்தின் முந்தைய நாள் இரவு ஆஷிக் குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இந்த சண்டையின் காரணமாக ஆஷிக் குமார் தனது மனைவியையும் குழந்தையையும் கொலை செய்து விட்டு தூக்கில் தொங்க விட்டு பின்பு அவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.