பட்டுப் புடவையில் ஹாங்காங் பெண்… தாலி கட்டிய தமிழக இளைஞர் : சுவாரஸ்ய காதல் கதை!!

529

புதுக்கோட்டை..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமைந்துள்ளது மீமிசல் என்னும் பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி பெயர் உமா. இந்த தம்பதியரின் மகன் பெயர் காத்த முத்து (எ) மணிகண்டன்.

இவர் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஐடி பிரிவில் பணி செய்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டு காலமாக ஹாங்காங்கிலும் பணிபுரிந்து வந்துள்ளார் மணிகண்டன்.

அந்த சமயத்தில் மணிகண்டனுக்கு ஹாங்காங் நாட்டை சேர்ந்த அலார்கான் – செரில் தம்பதியினரின் மகளான செல்சீயுடன் நட்பு உருவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதலும் மலர்ந்துள்ளதாக தெரிகிறது.


வெவ்வேறு நாடுகள் என்பதையும் தாண்டி, இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். அப்படி இருக்கையில், இதற்கடுத்த கட்டமாக இருவரும் தங்களின் பெற்றோர்களிடமும் தங்களது காதலை பற்றி தெரிவித்து உள்ளனர்.

முதற்கட்டமாக இருவரது வீட்டிலும் அவர்களின் காதலுக்கு சற்று தயக்கம் காட்டியதாக தெரிகிறது. பின்னர் மணிகண்டன் மற்றும் செல்சீ ஆகிய இருவரின் காதலையும் உணர்ந்து கொண்டு அதற்கு அவர்கள் சம்மதமும் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படியும் மணிகண்டன் மற்றும் செல்சீ ஆகியோரின் திருமணம் நடைபெற வேண்டும் என்றும் மணிகண்டன் பெற்றோர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதற்கு செல்சீயின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டையில் அமைந்துள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் உறவினர்கள் புடை சூழ, தமிழர்களின் முறைப்படி மணிகண்டன் மற்றும் செல்சீ ஜோடியின் திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் தனது திருமணத்தில் சேலை அணிந்தபடி மணப்பெண் கோலத்தில் இருந்தார் செல்சீ. இருவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தவும் செய்திருந்தனர்.

மணிகண்டன் – செல்சீயின் திருமண புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இதனை தமிழக மக்கள் பலரும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.