பிரபல நடிகர் சுஷாந்த் சிங் இன் இழப்பு தந்த அதிர்ச்சியில் பறிபோன இன்னும் ஒரு உயிர்!

864

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் இன் இழப்பு தந்த அதிர்ச்சியில் பறிபோன இன்னும் ஒரு உயிர்!

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும் உலுக்கி போட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் இதை மறுக்கும் சுஷாந்த் சிங்கின் உறவினர் ஆர்.சி.சிங், சுஷாந்தின் மறைவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் மும்பை காவல்துறையினர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனால் இந்த விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து இறந்ததாக சொல்லும் சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திஷா ஷலியனின் மறைவும் கொலையாக இருக்கும் என தான் சந்தேகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே சுஷாந்த் சிங், மூச்சு திணறலால் உயிரிழந்ததாக அவரது, உடற்கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை கூப்பர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சுஷாந்தின் உடலுக்கு அவரது தோழி ரியா சக்கரவர்த்தி அஞ்சலி செலுத்தினார். அவரிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


சுஷாந்தின் இறுதி சடங்குகள், அவரது உறவினர்கள் முன்னிலையில் மும்பையின் பவன் ஹன்சின் வைல் பார்லே வில் நடைபெற்றது.

இறுதிச்சடங்கு நடந்த அதே நேரத்தில், சுஷாந்தின் நெருங்கிய உறவினர், பீகார் மாநிலம் புர்னியாவில் திடீரென மரணமடைந்துள்ளார். சுஷாந்தின் சொந்த ஊரான இங்கு வசித்து வரும் அவரின், நெருங்கிய உறவினரான சுதா தேவி உயிரிழந்துள்ளார்.சுஷாந்தின் இறப்புச் செய்தியைக் கேட்டு தண்ணீர் கூட குடிக்காமல் அதிச்சியில் இருந்த அவர், திடீரென நிலை குலைந்து உயிரிழந்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.