குஜராத்….
தேர்வு எழுதிக் கொண்டிருந்த நிலையில், தேர்வறையில் சுருண்டு கீழே விழுந்து மாரடைப்பு காரணமாக 9ம் வகுப்பு மாணவி மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
60, 70 வயதுகளைக் கடந்தவர்கள் மாரடைப்பு காரணமாக மரணமடைந்து வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றுக்களின் வருகைக்கு பின்பான வாழ்க்கையில், இளம்வயதினர் பலரும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்டு மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
நடனம் ஆடும் போது மரணம், மணமேடையில் மயங்கி விழுந்து மரணம், உடற்பயிற்சி செய்யும் போது மரணம் என கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளம் வயது பிள்ளைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.
குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில் 9ம் வகுப்பு பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த நிலையில் தற்போதெல்லாம் இளம் வயதினருக்கு அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்டு மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இதே போல் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி வருகிறது. குஜராத் மாநிலம் அம்ரேலியில் 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவி சாக்ஷ் ரஜோசரா என்றும், அவர் ராஜ்கோட் மாவட்டத்தின் ஜாஸ்டன் தாலுகாவில் வசித்து வருபவர்.
சாந்தபா கஜேரா பள்ளியில் படித்து வந்த அவர் நேற்று காலை தேர்வறைக்குள் நுழையும் போது மயங்கி விழுந்துவிட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக குஜராத்தில், குறிப்பாக ராஜ்கோட்டில் இளம் வயதினருக்கு மாரடைப்பால் பீதியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனாவுக்கு மாரடைப்பால் உள்ள தொடர்பு குறித்து கூறியிருந்தார்.
மேலும் கடுமையான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்பதாகவும் மிகவும் கடினமாக உழைக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.