11 மாத குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்த இளம்தாய்!.. சிலம்பரசனால் வந்த விபரீதம்!!

283

தமிழகத்தில் 11 மாத குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

திருப்பத்தூர் அருகெ கந்திலி அடுத்த நார்சாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன், இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 11 மாதத்தில் குழந்தையொன்றும் உள்ளது.

இந்நிலையில் சிலம்பரசனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பது கவிதாவுக்கு தெரியவந்தது.

இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது, இதில், மனமுடைந்த கவிதா இன்று காலை கணவன் வேலைக்கு சென்ற பின்பு, தனது 11 மாத ஆண் குழந்தைக்கு தூக்கு மாட்டி விட்டு, கவிதாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

நீண்ட நேரம் ஆகியும் கவிதா வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் கவிதா சடலமாக கிடந்துள்ளார்.

குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது, எனினும் குழந்தையை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சிலம்பரசனை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.