11 லட்சம் பாலோவர்ஸ்..! டிக் டாக் பிரபலம் திடீர் தற்கொலை..! 16 வயதில் விபரீத முடிவு! அதிர்ச்சி காரணம்!

756

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னுடைய இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தற்கொலை சம்பவமானது இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரைப்போலவே தற்போது மேலும் ஒரு டிக் டாக் பிரபலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பை அதிகரித்துள்ளது. சியா கக்கர் என்பவர் டிக் டாக்கில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக வலம் வந்தவர் ஆவார்.

சியா கக்கர் டெல்லியின் கீதா காலனி பகுதியில், தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 16 வயதே ஆகும் இவரை டிக்டாக்கில் 11 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அந்த அளவிற்கு பேமஸான சியா கக்கர் கடந்த புதன்கிழமை இரவு 9 மணி அளவில் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.‌ இந்த சம்பவம் அவரைப் பின்தொடரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்த சியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவருடைய தற்கொலைக்கான காரணங்களை விசாரணை செய்து வருகின்றனர்.

தற்போது நடைபெற்றுள்ள முதற்கட்ட விசாரணையில் சியா ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார் என்றும் கடந்த 4 முதல் 5 நாட்களாக அவர் மிகவும் மன அழுத்தத்தில் இருந்து உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. ஒருவேளை மன அழுத்தம் அதிகரித்தால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

சியா கக்கரின் திடீர் மறைவுக்கு நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் நெட்டிசன்கள் தங்களுடைய இரங்கல் செய்தியை சமூக வலைதள பக்கங்களில் மூலம் பதிவு செய்து வருகின்றனர். இம்மாதிரியான பிரபலமான நட்சத்திரங்கள் தொடர்ந்து இம்மாதிரியான தற்கொலை முடிவுகளை நோக்கி செல்வது அனைவரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.