14 வயது மகனுடன் சேர்ந்து தாயை கொன்ற மகள்!… நேரில் பார்த்த சகோதரிக்கு நேர்ந்த கதி!!

316

தமிழகத்தின் பெரம்பலூரில் சொத்துக்கு ஆசைப்பட்ட தாய் மற்றும் சகோதரியை கொன்ற வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் அடுத்துள்ள அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராணி. இவருக்கு தனலட்சுமி, வள்ளி, ராஜேஸ்வரி என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார். 2வது மகள் வள்ளி திருமணமாகி அதே ஊரில் தாயாரின் வீட்டிற்கு அருகே 14 வயது மகன் வினோத்குமாருடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

3வது மகள் ராஜேஸ்வரிக்கும் திருமணமான நிலையில் ஒன்பது வயது மகன் விஷாலுடன் தாயார் ராணியுடன் வசித்து வந்துள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

வள்ளி மற்றும் ராஜேஸ்வரியின் கணவர்கள் இருவரும் மலேசியாவில் வேலை செய்து வருகின்றனர்.

கடன் அதிகம் இருந்ததால் ராஜேஸ்வரி அடிக்கடி தாய் வீட்டுக்கு வந்து சொத்தை பிரித்து தருமாறு கேட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 19ம் திகதி வீட்டின் வாசலில் கோலம் போடச்சென்ற வள்ளி, தனது தாயும் ராஜேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக ஒப்பாரி வைத்து அழுதுள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்து சென்ற பொலிசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பணப் பிரச்சனையால் இறந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகித்த நிலையில், கழுத்தில் காயங்கள் இருந்ததால் பொலிசாரின் சந்தேகம் வலுத்துள்ளது.

இதனை தொடர்ந்து வள்ளியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.

அதாவது, தாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இளைய மகள் ராஜேஸ்வரியை மட்டும், தன்னுடன் வைத்துக்கொண்டு பல்வேறு வகையில் உதவி செய்து வந்ததால் இருவர் மீதும் வள்ளி கோபம் அடைந்துள்ளார்.

இதனால் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்ட வள்ளி, மருந்து எனக்கூறி விஷத்தை தாய்க்கு கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து உயிருக்கு போராட, மேலும் ஒரு மூடி விஷத்தை வாயில் ஊற்றியுள்ளார்.

இதனை பார்த்துவிட்ட சகோதரி ராஜேஸ்வரியை தனது 14 வயது மகனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு வழக்கம் போல் பக்கத்து தெருவில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர் காலை கோலம் போட வருவது போன்று ஊரைக் கூட்டி தற்கொலை நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வள்ளியையும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது 14 வயது மகனையும் போலீசார் கைது.