15 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை… பிரபல காஸ்ட்டியூம் டிசைனர் கைது!!

59

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் 15 வயது சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர். அதில், ”11ம் வகுப்பு படித்து வரும் எங்களது மகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மருத்துவர்கள் பரிசோதித்து சிறுமி பாலியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தனர். எங்களது மகளை சீரழித்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இது குறித்த விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமி, வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் அடிக்கடி தன்னுடன் படிக்கும் தோழிகளுடன் அண்ணாநகர் கஃபேவில் டீ, ஸ்நாக்ஸ் சாப்பிடுவார். அதில் பெருங்களத்தூர் பிரதிஷா ஆதிராவும் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் இணைந்து கொள்வார்.

பிரதிஷா சினிமாவில் காஸ்ட்டியூம் டிசைனராக வேலை பார்த்து வருகிறார் . பிரதிஷா சிறுமியுடன் நட்பாக பழகி வாட்ஸ்அப்பிலும் பேசி வந்துள்ளார். அவர் சிறுமியிடம் “உன் அழகுக்கு மட்டும் சினிமாவில் சான்ஸ் கிடைத்தால் பெரிய ஹீரோயினாக வருவாய்” என ஆசை காட்டியுள்ளார்.

மே 2வது வாரம் சிறுமியை சந்தித்த பிரதிஷா, மே 13ம் தேதி தன்னுடைய பர்த்டே என்பதால், பிறந்த நாள் விழாவுக்கு கட்டாயம் வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். சிறுமியும் தனது பெற்றோரிடம் சொல்லிவிட்டு பார்ட்டிக்கு கிளம்பிச்சென்றார்.

சாலிகிராமத்தில் ஆன்லைன் மூலம் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் புக் செய்து சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சோமேஷ் மற்றும் வில்லியம்ஸை அறிமுகப்படுத்தியுள்ளார். மொபைலில் பாட்டு போடு பிரதிஷா டான்ஸ் ஆடினார். சிறுமியையும் தன்னுடன் டான்ஸ் ஆட வற்புறுத்தியுள்ளனர்.


டான்ஸ் ஆடும்போதே, சிறுமியிடம் ஆபாசமாக நடந்து கொண்டிருக்கிறார் வில்லியம்ஸ். உடலில் தொட்டு பாலியல் ரீதியாக சிறுமிக்கு ஆசைகளை தூண்டினார். சிறுமி தன்னுடைய வீட்டிற்கு செல்ல முயன்றார்.

ஆனால், பிரதிஷாவை தனியாக அழைத்துச் சென்ற வில்லியம்ஸ், சிறுமியுடன் இன்றிரவு தனியாக இருக்க வேண்டும் எனக்கேட்டதாக தெரிகிறது. அதனால் மயக்க மருந்து கலந்த இனிப்பை சிறுமியிடம் கொடுத்துள்ளார்.

அதை சாப்பிட்டதும் சிறுமிக்கு மயக்கம் வந்துள்ளது. பின்னர், அந்த சிறுமி இருந்த அறைக்கு வில்லியம்ஸ் சென்று ரூம் கதவை பூட்டிவிட்டார். இதற்கு பிறகு மயக்க நிலையில் கிடந்த சிறுமியின் ஆடைகளை களைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மற்றொரு ரூமில், பிரதிஷாவும், காதலன் சோமேஷுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு, நான் வீட்டிற்கு செல்கிறேன். சிறுமியை பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு பிரதிஷா சென்றுவிட்டார். சோமேஷ், வில்லியம்ஸ் இருவருமே சிறுமியை அன்றிரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதனால் சிறுமிக்கு மிகவும் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மறுநாள் பிரதிஷாவிடம் சொல்லி சிறுமி அழுதுள்ளார். அதற்கு பிரதிஷா, “மரியாதையாக வீட்டிற்கு கிளம்பி போ.. இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம்.

இரவு எடுத்த நிர்வாண வீடியோவையும் வெளியிடுவோம்” என மிரட்டல் விடுத்துள்ளார். பயந்துபோன சிறுமி வீட்டிற்கு வந்து யாரிடமும் சொல்லாமல் கடுமையாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்கவும் முடியாமல் 2 நாட்களாக அவதிப்பட்டுள்ளார்.

சிறுமியின் உடலில் பல இடங்களில் காயங்கள், வீக்கங்கள் இருப்பதை குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து போலீசிலும் புகார் கொடுத்தனர். இந்த புகாரின்பேரில், சிறுமியை அழைத்துச் சென்ற, சாலிகிராமம் அப்பார்ட்மென்ட்டுக்கு போலீசார் விரைந்தனர்.

அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிறுமியை பிரதிஷாவும், காதலனும், ஆண் நண்பரும் சேர்ந்து, புக்கிங் செய்யப்பட்ட அப்பார்ட்மென்ட் ரூமுக்குள் அழைத்துச் செல்வது பதிவாகியிருந்தது. இறுதியில், பிரதிஷா, அவரது காதலன் சோமேஷ் மற்றும் ஆண் நண்பர் வில்லியம்ஸ் ஆகியோர் மீது கொலை மிரட்டல், போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டன.

பிரதிஷா, சோமேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் வில்லியம்ஸ் தலைமறைவாக உள்ளதால், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.