16,000 அடி உயரத்தில் பறந்த விமானம்! அழகு தமிழில் அறிவிப்பு செய்த கேப்டன்!!

777

சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற இண்டிகோ விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த கேப்டனின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. அவருக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

தமிழகத்தில் பறக்கும் விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்யவேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்துவருகிறது.

இந்தியாவில் தற்போது விமானங்களில் அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலேயே வெளியிடப்படுகின்றன. இதற்கிடையில், இண்டிகோ விமானத்தில் கேப்டனாக இருப்பவர் வடசென்னையைச் சேர்ந்த பிரிய விக்னேஷ்.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து மதுரை சென்ற விமானத்தில், தமிழில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவருக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுதெரிவித்துவருகின்றனர்.