17 வயது சிறுவன் கொலை.. ஆசிரியையின் காதலன் செய்த வெறிச்செயல் : தவறை மறைக்க நாடகமாடிய கொடுமை!!

31

லக்னோவில்..

லக்னோவின் கான்பூர் நகரில் 17 வயது சிறுவன் ஒருவர் அவருடைய ஆசிரியையின் காதலன் கொலைசெய்துவிட்டு அதனை மறைக்க அந்த சிறுவனின் குடும்பத்தாருக்கு, சிறுவன் கடத்தப்பட்டதை போல ஒரு செய்தியையும் அனுப்பியுள்ளதாக போலீசார் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளனர்.

கான்பூரில் 10 ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனை, அச்சிறுவனின் டியூஷன் ஆசிரியை ரச்சிதாவின் காதலரான பிரபாத் சுக்லா, ஸ்டோர் ரூமுக்கு அழைத்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பின்னர், சிறுவன் பிரபாத்தை தனது வீட்டிலிருந்து ஸ்டோர் ரூம் வரை அந்த கொலையாளி பின்தொடர்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் பிரபாத் அந்த சிறுவனிடம் அவரது ஆசிரியை ரசிதா தன்னை அழைக்கிறார் என்றும், அதனால் தான் அவனை பின்தொடர்கிறேன் என்று கூறியுள்ளார். சிறுவனும், பிரபாத்தும் ஒன்றாக அந்த அறைக்குள் நுழைவதைக் CCTV காட்சிகளில் காணலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 20 நிமிடங்களுக்குப் பிறகு பிரபாத் மட்டுமே வெளியே வந்தார் என்றும், அந்த சிறுவன் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், பிரதாப் சென்று திரும்பி பிறகு வேறு யாரும் அந்த அறைக்குள் நுழையவில்லை என்று போலீசார் கூறுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் தனது உடைகளை மாற்றிக்கொண்டு அங்கிருந்த அந்த சிறுவனின் ஸ்கூட்டரில் செல்வதையும் CCTV காட்சிகளில் காணமுடிகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் பிரபாத், 21 வயதான ரச்சிதா மற்றும் அவர்களது நண்பர் ஆர்யன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த சிறுவன் கடத்தப்பட்டதாகவும், அவரை விடுவிக்க பணம் தர வேண்டும் என்றும் போலியாக சிறுவனின் குடும்பத்துக்கு கடிதம் வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால் முதற்கட்ட விசாரணையில், கடிதம் வழங்கப்படுவதற்கு முன்பே சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணம் இப்பொது வரை அறியப்படவில்லை என்றும், சிறுவனின் பிரேத பரிசோதனைக்கு பிறகு உண்மைகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.