2 பெண்களை வன்கொடுமை செய்த நபரிடம் பல லட்சம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் இவர் தான்! வெளியான புகைப்படம்!!

725

இந்தியாவில் பெண் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான நபரிடம் 35 லட்சம் ரூபாய் லஞ்சம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்-மேற்கு மஹிலா காவல் நிலைய பொறுப்பாளராக இருப்பவர் ஸ்வேதா ஜடேஜா.

இந்நிலையில் வேளாண் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனல் ஷா என்பவர் தங்களை வன்கொடுமை செய்து விட்டதாக இரண்டு பெண்கள் ஸ்வேதாவிடம் புகார் அளிட்துள்ளனர்.

அப்பெண்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கெனல் ஷாவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யாத ஸ்வேதா, சாதாரண குற்றத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதற்காக கேனல் ஷாவின் சகோதரரின் மூலம் 20 லட்சம் லஞ்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார். மேலும் ரூ.15 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த தொகை கேனால் ஷாவின் தரப்பிலிருந்து இன்னும் வழங்கப்படாததால் அவர்களை ஸ்வேதா தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரியவர, ஸ்வேதாவை கைது செய்தனர்.

அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வேதாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் விசாரித்த வன்கொடுமை வழக்கை மீண்டும் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here