20 நாட்களில் உடல் எடையைக் குறைக்கும் அதிசய நீர்..! ஆய்வாளர்களின் ஆயுர்வேத கண்டுபிடிப்பு!!

711

உடல் எடை………

உடல் எடையை குறைக்க பல்வேறு வழி முறைகளை நாம் கையாண்டிருப்போம். மிக கடினமான செய்முறைகளை கூட நாம் முயற்சித்து சோர்ந்திருப்போம்.

ஆனால், இவற்றில் கிடைக்காத பலன்கள் வெறும் தண்ணீரை கொண்டு நம்மால் அடைய முடியும் என்றால் அது எவ்வளவு ஆச்சரியத்திற்குரிய விடயமாகும்.

சீராக நீரை குடித்து வந்தால் பலவித அற்புதங்கள் உடலில் நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெரும்பாலும் இந்த முறையை ஆயுர்வேத முறையாகவும் கருத்துவர்களாம். இந்த நீரின் முக்கியத்துவத்தையும், இதனால் எவ்வாறு 20 நாட்களிலே உடல் எடையை குறைக்க முடியும்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

உடல் எடை கூடி கொண்டே செல்வதால் ஆரோக்கியத்தையும், உளவியல் நலனையும் நாம் கெடுத்து கொள்கிறோம். பலர் உடல் எடையை உடனே குறைக்க வேண்டும் என்பதற்காக விபரீத முறையில் முயற்சி செய்து உயிருக்கே உலையாக வந்த கதைகள் கூட இருக்கிறது.

மிக குறைந்த கலோரிகள்
1 ஸ்பூன் சீரகத்தில் வெறும் 7 கலோரிகளே உள்ளன. ஆதலால் இதனை குடிப்பதால் உடல் குறையுமே தவிர, ஒரு போதும் கூடாது. முக்கியமாக கொழுப்புக்களை கரைக்க இந்த சீரக நீர் பெரிதும் பயன்படும். தொடர்ந்து 20 நாட்கள் இந்த சீரக நீர் குடித்து வந்தால் உடல் பருமன் சட்டென குறையும்.

விஞ்ஞானிகளின் கருத்து என்ன…?
சீரகத்தில் அதிகமான அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதாம். அதாவது, இதில் உள்ள வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் எ முக்கியமான தாதுக்களாகும். அத்துடன் இதில் மக்னீஸ் மற்றும் காப்பர் அதிக அளவில் உள்ளது. எனவே, உடல் பருமன் கூடாமல் இந்த ஊட்டசத்துக்கள் நமது உடலை காத்து கொள்ளும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உடலில் சேர கூடிய கெட்ட கொலஸ்டரோலை அழிக்க ஒரு அற்புத வழிதான் இந்த சீரகநீர். ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிக படியான கெட்ட கொலஸ்டரோலை 20 நாட்களிலே இந்த சீரக நீர் கரைத்து விடுமாம். மேலும், நல்ல கொலஸ்டரோலை சீரான அளவில் உடலில் வைத்து கொள்ளும்.

சக்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்..
தினமும் சீரக நீரை குடித்து வந்தால் உடல் பருமன் குறைவதோடு வேறு சில நன்மைகளும் நடக்குமாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெரிதும் உதவும். இந்த நீர் இன்சுலின் உற்பத்தியை உடலில் அதிகரிக்க செய்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சீரக நீர் மிக சிறந்த மருந்தாகும்.

தயாரிக்கும் முறை எப்படி..?
முதல் நாள் இரவே சீரகத்தை நீரில் ஊற வைத்து கொள்ளவும். பிறகு அடுத்த நாள் காலையில் இதே நீரை மிதமான சூட்டில் கொதிக்க விட்டு குடித்து வரலாம். இல்லையென்றால் அப்படியே இந்த நீரை குடித்தும் வரலாம். இவ்வாறு 20 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை எளிமையாக குறையும்.