23 ஆண்டுகள் துபாயில் இருந்த இந்தியரை ஒரே நாளில் கோடீஸ்வரராக மாற்றிய DDF லொட்டரி!!

821

துபாயில்….

துபாயில் 23 ஆண்டுகளாக மேலாக Lucky Draw-ல் தனது அதிர்ஷ்டத்தை சோதித்த கவுடா அசோக் கோபாலுக்கு (Gowda Ashok Gopal), இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி 3-ஆம் திகதி ஜாக்பாட் அடித்துள்ளது.

Dubai Duty Free (DDF) Millennium Millionaireல் கோபால் ஒரு மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார். இது இலங்கை பணமதிப்பில் ரூ. 32,28,85,000 ஆகும். 59 வயதான கோபால் தற்போது மும்பையில் இருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் திகதி DDFன் 40வது ஆண்டு விழாவில் டிக்கெட் எண் 3082 ஆன்லைனில் வாங்கியதாக அவர் கூறினார்.

23 வருடமாக ஒவ்வொரு வருடமும் DDF டிக்கெட் வாங்குவது என்னுடைய தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது. இந்த வருடமும் டிக்கட் வாங்கினேன், இம்முறை டிக்கெட் எண் 3082 என்னை கோடீஸ்வரனாக்கியது. விரைவில் துபாய் சென்று பரிசுத்தொகையை வாங்க உள்ளதாக கோபால் கூறியுள்ளார். DDFன் முதல் டிராவும் வெளிவருவதைப் பார்த்தேன்..


23 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருவதாக கூறும் கோபால்,1999-ல் DDF தனது முதல் டிராவை நடத்தியபோது அவர் அங்கு இருந்ததாக கூறினார். அப்போது ஆன்லைன் ஷாப்பிங் கிடையாது, டிக்கெட் வாங்க வரிசையில் பொறுமையாக நிற்க வேண்டும் என்றார்.

DDF டிக்கெட்டுகளை முதலில் வாங்கியவர்களில் நானும் ஒருவன். நாங்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்றோம், முதல் டிராவில் எனக்கு முன்னால் இருந்தவர் வெற்றி பெற்றார். அடுத்ததாக அந்த அதிர்ஷ்டம் எனக்கு வரும் என்று உணர்ந்தேன். அதனால் ஒவ்வொரு வருடமும் டிக்கெட் வாங்கிட்டு இருந்தேன். இப்போது பரிசு விழுந்துவிட்டது.

நவம்பர் 1999-ல் Dubai Duty Free லொட்டரி தொடங்கப்பட்டதிலிருந்து 1 மில்லியன் டொலர் பரிசை வென்ற 222வது இந்திய நாட்டவர் கோபால் ஆனார். 2015-க்குப் பிறகு துபாய்க்குப் போகவே இல்லை என்றும் ஆனால் துபாயுடனான தனது தொடர்பு முறிக்கப்படவில்லை என்றும் கோபால் கூறுகிறார்.

மும்பை வந்த பிறகும் ஆண்டுதோறும் DDF டிக்கெட் வாங்கத் தவறவில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களில் தோல்வியால் தான் ஏமாற்றமடையவில்லை என்று கோபால் கூறினார். தற்போது அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளதால், நிலுவையில் உள்ள பல பணிகளை செய்து முடிப்பதோடு, தொண்டு செய்வதாகவும் கூறியுள்ளார்.