38 வயதில் நடந்த திருமணம்! புதுமாப்பிள்ளைக்கு எதிர்பாராமல் நடந்த துயரம்…

699

இந்தியாவில் கட்டுமான பணியில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் தான் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது.

கங்கோலி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் பூஜாரே (38). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் ஒரு பெரிய கிணற்றை தோண்டும் கட்டுமான பணி நடந்து வந்தது.

அதன் அருகில் லட்சுமணன் பூஜாரே நின்று கொண்டிருந்த போது திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்த நபர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் லட்சுமணனை வெளியில் தூக்கிய போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

38 வயதில் திருமணமான புதுமாப்பிள்ளை எதிர்பாராத விதமாக உயிரிழந்தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.