48 வயசாகியும் கல்யாணம் பண்ணல… ஆனால், அது இன்னும் இருக்கு: ரகசியத்தை உடைத்த நக்மா!!

116

நக்மா..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை நக்மா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும், கொடி கட்டி பறந்தவர். தமிழில் காதலன் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தொடர்ந்து பாட்சா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன், தீனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்சா படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய பெரிய ஹிட் ஆகி தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. இதனிடையே கிரிக்கெட் வீரர் கங்குலியை ரகசியமாக காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்கள். அதன் பின் அரசியலில் குதித்த அவர் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதியில் போட்டியிட்டார்.

தற்போது 48 வயதாகும் நக்மா திருமணம் செய்துக்கொள்ளாமல் திரைப்படங்களில் கூட நடிக்காமல் தன் மனதிற்கு மகிழ்ச்சி தரும் அமைதியான நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திருணம் செய்துக்கொள்ளாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,


எனக்கு திருமணம் செய்யவே கூடாது என்பதெல்லாம் எண்ணமில்லை. சொல்லப்போனால் திருமணம் செய்துக்கொண்டு குடும்பம், குழந்தைகள் என வாழ ஆசையாக இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் அப்படி ஏதாவது நடக்குதா என்று…. இருந்தும் திருமணம் செய்துக்கொள்ளாமலே நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். சந்தோஷம் என் வாழ்க்கையில் குறைவில்லாமல் இருக்கிறது என அவர் கூறினார்.