புதுச்சேரியில்..
புதுச்சேரி வில்லியனூர் பகுதிக்கு அருகே உள்ள கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் கருணாகரன் 50 வயதான இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் 21 வயதான கல்லூரி மாணவி ஒருவர் அவரிடம் அறிமுகமானார், அவர் தனது உறவினருடன் இருந்து படித்து வருவதாகவும்,
தற்பொழுது சூழ்நிலை சரியில்லாததால் வேறு வீடு பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார். இந்த நபரும் மாணவியிடம் தனது நம்பரை கொடுத்துள்ளார். அதன்பிறகு செல்போனில் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, சகஜமாக பேசி உள்ளனர்.
அப்போது, இளம்பெண், திடீரென்று நாம் வெளியே சென்று ஆனந்தமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இந்நிலையில், அவர் வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டை சுடுகாட்டு சாலையில் உள்ள பம்புசெட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருக்க முயற்சி செய்தபோது,
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
முட்புதரில் பதுங்கியிருந்த 3 பேர் செல்போனில் படம் பிடித்தபடி டார்ச் லைட் அடித்துக்கொண்டு கருணாகரனை நோக்கி வந்து மிரட்டியுள்ளனர். இவரும் பயந்து தன்னிடம் இருந்த 75 ஆயிரம் மற்றும் நண்பரிடம் இருந்து 50 ஆயிரம் என பெற்று கொடுத்துள்ளார். மேலும், இவர் இது குறித்து காவல் துறையில் புகாரளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் மோசடியில் ஈடுபட்ட ராமு, பிரகாஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும், வனிதா, அருண்குமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.