60 பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளியின் முதல்வர்!!

99

அரியானாவில்..

அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் 60 மாணவிகளை செய்முறைத் தேர்வுகளில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி அப்பள்ளியின் முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 15 மாணவிகள் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு 5 பக்க கடிதம் அனுப்பினர். பின்னர் கடந்த மாதம் 31-ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக,

போக்சோ மற்றும் ஐபிசி 354-வது பிரிவின் கீழ் உச்சனா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட 60 வயது பள்ளியின் முதல்வர் கடந்த 5 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.


பள்ளியில் முதல்வரே 60 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.