8 முறை டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட இளைஞர்.. நிலத்தகராறில் வெறிச்செயல்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!!

91

ராஜஸ்தானில்..

ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரைச் சேர்ந்தவர்கள் பகதூர் சிங், அதர் சிங். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இருவரிடையே நீண்டகாலமாக நிலம் தொடர்பாகப் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை பகதூர் சிங்கின் குடும்பத்தினர் சர்ச்சைக்குரிய அந்த நிலத்துக்கு டிராக்டரில் வந்திருக்கின்றனர்.

சிறிது நேரத்தில் அதர் சிங்கின் குடும்பத்தினரும் அந்த நிலத்துக்கு வந்திருக்கின்றனர். இதனால் இரு குடும்பத்தாருக்கும் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அது தீவிர வாக்குவாதமாக மாறியது. இந்த வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். அப்போது அதர் சிங்கின் மகன்களில் ஒருவரான நிர்பத் சிங் கீழே விழுந்திருக்கிறார்.

அப்போது அவரின் சகோதரரான தாமோதர் சிங், நிர்பத் சிங்மீது டிராக்டரை ஏற்றியிருக்கிறார். அவர் வலியால் துடித்தபோது சற்றும் எதிர்பாராமல் முன்னும் பின்னுமாக 8 முறை டிராக்டரை அவர்மீது ஏற்றி இறக்கி, கொலைசெய்திருக்கிறார். மற்ற குடும்ப உறுப்பினர்கள் தலையிட்டும் தாமோதர சிங்கைத் தடுக்க முடியவில்லை.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

மேலும், இந்த நிலத்தகராறில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, 4 பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றது. நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இந்தச் சம்பவத்தின் வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.