8 மாத கர்ப்பமாக இருந்த பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

104

சின்னத்திரை நடிகை பிரியா..

மலையாள சின்னத்திரை மூலம் நடிகையாக வலம் வந்தவர் பிரியா. இவருக்கு வயது 35 ஆன நிலையில் மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார். இவர், உயிரிழக்கும் போது 8 மாத கர்ப்பமாக இருந்தார் என்பது தான் இவருடைய ரசிகர்களை இன்னும் கூடுதல் சோகத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனை, அவரது சக நடிகர் கிஷோர் சத்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில், சின்னத்திரை நடிகையான பிரியாவின் குழந்தை தற்போது ஐசியுவில் இருக்கிறார் எனவும் கிஷோர் சத்யா தெரிவித்துள்ளார்.

நடிகரான கிஷோர் சத்யா தனது பதிவில், “பிரியாவின் இறப்பிலிருந்து அவரது அம்மாவும், கணவரும் எப்படி மீண்டு வருவார்கள் என தெரியவில்லை. 35 வயது என்பது மரணமே கிடையாது. அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என கூறியுள்ளார்.


இதில், பிரியா திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு இடைவெளி விட்டிருந்தார். இதன் பின் கர்ப்பத்திற்கு பிறகு மருத்துவ பரிசோதனைகளையும் செய்து வந்துள்ளார். ஆனால், தற்போது மாரடைப்பு குறித்து அவரது தரப்பில் இருந்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை