90 சதவிகிதம் வழக்கு முடிந்துவிட்டது… பிரித்தானிய சிறுமி மாயமானதற்கு இவன்தான் காரணம்!!

600

பிரித்தானிய சிறுமி மாயமான வழக்கு 90 சதவிகிதம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், தங்களைப் பொருத்தவரை சிறுமி மேட்லின் மெக்கேன் கடத்திக் கொல்லப்பட்டதற்கு Christian Bruecknerதான் காரணம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல்லுக்கு பெற்றோருடன் சுற்றுலா சென்றபோது மூன்று வயது மேட்லினை தவறவிட்டனர் அவளது பெற்றோர்.

Christian Brueckner என்ற ஜேர்மானியர் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவரது முன்னாள் காதலி என கருதப்பட்ட Nicole Fehlinger என்பவருக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் பொலிசாருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், Bruecknerஐ பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்த Nicoleஇன் தந்தையான Dieter Fehlinger (65), தனது மகள் அந்த காலகட்டத்திலேயே திருமணமாகி 6 வயது குழந்தைக்கு தாயாகியிருந்தார் என்றும், அவருக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளார்.

அத்துடன் தான் பொலிசாரை சந்தித்ததாகவும், ஜேர்மன் பொலிசார் பிரித்தானிய சிறுமி மாயமான வழக்கை 90 சதவிகிதம் முடித்துவிட்டார்கள் என்றும்,

சிறுமி மேட்லின் மெக்கேன் கடத்திக் கொல்லப்பட்டதற்கு Christian Bruecknerதான் காரணம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here