CORONA தொற்றினால், தலைமறைவான சூர்யாதேவி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு…!

501

நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி சூர்யா தேவியை விசாரித்த பெண் காவல் ஆய்வாளர் ரேணுகாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சூர்யாதேவி கைது செய்யப்பட்டதும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் தலைமறைவாக சூர்யாதேவி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால் கொரோனாவை பரப்பும் வகையில் சூர்யா தேவி செயல்படுவதாக அவர் மீது மேலும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here