ஆம்புலன்ஸை ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா.. எதற்காக தெரியுமா?

528

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா, ஆந்திர அரசியலில் குதித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற சடமன்ரத் தேர்தலில் மக்களிடையே பிரசாரம் மேற்கொண்டார். அவரது வளர்ச்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஆந்திராவில் மருத்துவப்புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், உயிர்காக்கும் அனைத்து உபகரணங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக கிராமங்களுக்காக ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடைபெற்றது. இதில் நடிகை ரோஜா கலந்துகொண்டதுடன் திடீரென ஆம்புலன்ஸை ஓட்டினார்.

இதைப் பார்த்த தெலுங்கு தேசம் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். ரோஜா சாகசம் செய்வதற்கு ஆம்புலன்ஸ் தான் கிடைத்ததா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவசர கால ஊர்தியை இயக்க ரோஜாவிடம் உரிய லைசென்ஸ் உள்ளதா எனவும் விமர்சனத்தை கூறி வருகின்றனர்.