இன்றைய ராசிபலன் (01-12-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

87

இன்றைய ராசிபலன்….

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயலாற்றக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தடைபட்ட சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறும். உங்களுடைய சாதுரியத்தால் உத்தியோகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக டென்ஷன் காணப்படுவீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு நேரடியான எதிரிகளின் தொல்லை பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய தைரியம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்துவந்த பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய புது விதமான தெம்பு பிறக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை குறைவாகவே இருக்கும். சக பணியாளர்களின் ஆதரவும் கிடைக்கும். புதிய விஷயங்களை கையாள்வதற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களின் கருத்தை புரிந்து கொள்ளும் உங்களுடைய ராசிக்கு இனிய நாளாக அமைய இருக்கிறது. வீட்டில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். சொத்துக்கள் ரீதியான விஷயத்தில் ஜாதக பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் புரிபவர்கள் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது உத்தமம். வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் மற்றும் தொழில் ரீதியான முன்னேற்றம் நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமூகமான சூழ்நிலையில் இருப்பார்கள். பிள்ளைகளால் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய உற்சாகம் மற்றவர்களையும் சேர்த்து உற்சாகப்படுத்தும் வகையில் அமையும். கணவன் மனைவியிடையே இருந்துவந்த புரிதல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சகோதர சகோதரிகளின் வழியே ஆதரவு உண்டு. சொத்துக்கள் வீடு மனை போன்ற விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அலைச்சல் மற்றும் டென்சிங் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ஏற்ற இறக்கங்களை கையாள்வதில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்லது நடக்கும். பெரிய மனிதர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் புதிய விஷயங்களை கற்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நபர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமையும். சகோதர சகோதரிகளின் இடையே இருந்து வந்த பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும். மனைவிவழி உறவினர்கள் மூலம் ஆதரவு உண்டு. சொத்துக்கள் தொடர்பான விஷயத்தில் அனுகூலமான பலன்கள் உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் களைப்புடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடலளவில் பலவீனமாக இருப்பீர்கள். மேலதிகாரிகளின் தொந்தரவு விரக்தியை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு அமோகமாக லாபம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இருவருக்குள்ளும் பரஸ்பர ஒற்றுமை பிறக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாள். எதிர்பார்க்காத விஷயங்களெல்லாம் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. யோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த தடைகள் உடையும். தொழில் ரீதியான முன்னேற்றம் பிரச்சினைகளை சந்தித்தாலும் சிறப்பாகவே இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் சற்று கூடுதல் கவனத்துடன் கையாள்வது மிகவும் நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்அனைவரையும் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நினைக்கும் உங்களுடைய ராசிக்கு நல்ல நாளாக அமைய இருக்கிறது. பெண்களுக்கு இறை வழிபாடுகளின் மூலம் மன நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய உத்திகளை கையாளக்கூடிய திறமைகள் வளரும்.