இன்றைய ராசிபலன் (02-12-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

89

இன்றைய ராசிபலன்……..

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வீட்டு தேவைகள் மற்றும் பணத்தேவைகள் தேவையான அளவிற்கு பூர்த்தியாகிவிடும். கணவன் மனைவி இடையே இருந்த நெருக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான நல்ல சூழ்நிலை உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வீர்கள். சுபகாரியங்களில் நீங்கள் சந்தித்து வந்த தடைகள் விலகும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப் பெறும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிதாக வேலை தேடுபவர்கள் காலதாமதமான பலன்களை பெறுவீர்கள் என்றாலும் நம்பிக்கையை கைவிட வேண்டாம். பூர்விக சொத்துக்கள் நல்ல பலன் கொடுக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அவசரப்படாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்ல நாளாக அமையும். எந்த ஒரு முடிவையும் சுயமாக சிந்தித்து எடுப்பது உத்தமம். அடுத்தவர்களின் தலையீட்டால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் மறைந்து விடும். வேலையில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். சுபகாரியத் தடைகள் விலகி நல்ல விஷயங்கள் நடைபெற இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதக பலன்களை காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப காரியச் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய வியாபாரத்தை விரிவு படுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவுக்கு மீறிய செலவுகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் அமையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய விடாமுயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் உங்களை மதிப்புடன் பார்ப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் பேசும் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. வீட்டில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உற்றார் உறவினர்களும் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கை தேவை. அடுத்தவர்களுக்கு ஜாமீன் போடுவதில் கவனம் இருப்பது அவசியமாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பெண்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய அற்புதமான நாள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வரவுக்கு மீறிய செலவுகளை சமாளிப்பீர்கள். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர் களுக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். கணவன்-மனைவி இடையே புதிய புரிதல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும் இருப்பினும் கவனம் தேவை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய ஆனால் வீண் விரயங்கள் இருந்தாலும் சுப விரயமாக மாறும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கை கூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வருகின்ற புதிய வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற மனஸ்தாபங்கள் மன உளைச்சலை கொடுக்க வாய்ப்புகள் உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் சஞ்சலங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் அற்புதமான நாள். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. இறை வழிபாடுகளில் கவனம் செலுத்தினால் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு.