இன்றைய ராசிபலன் (03-12-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

106

இன்றைய ராசிபலன்……..

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் மூன்றாம் நபர்களை எதிர் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் பல நடக்கக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஏற்றகரமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் வீண் விரயம் ஏற்படுவதை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கிரக அமைப்பு சிறப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் அப்படியே நடக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சக பணியாளர்களை அனுசரித்து சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். உடன் இருப்பவர்களே பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தை கொடுப்பது தவிர்ப்பது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்க வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் நடைபெறும். பெற்றோர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் சற்று சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கும். உங்களின் கிரக அமைப்புகள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் மௌனமாக இருப்பது சிறந்த பலன் தரும். குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் அனுசரித்து செல்வது உத்தமம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை இருந்தாலும் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் நபர்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உங்களுடைய கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். சமூகத்தின் மீதான உங்களது அக்கறை அதிகரிக்கும். தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. வாடிக்கையாளர்களை கவர புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லது கெட்டது இரண்டுமே கலந்து நடக்க வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய பலவீனம் எது பலம் எது என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பேச்சு மற்றும் செயல்களில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியமாகும். உங்களுடைய முன்கோபத்தால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். வருமானம் அதிகரிப்பதற்கு உரிய விஷயங்களை அதிகமாக ஆராய்ந்து பார்ப்பீர்கள். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக அமையும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்களை மனம் உடையும் பாக்கியம் உண்டாகும். ஆரோக்கியத்தில் சில தொந்தரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் உணவுக்கட்டுப்பாடு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய செயல்களில் உத்வேகத்தை காணலாம். எதிர்பாராத வெற்றிகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மூலம் முன்னேற்றம் காணலாம். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத தனவரவு மன மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அனுகூலமான பலன்களை கொடுக்கும். தந்தை வழி உறவினர்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமை காப்பது நலம் தரும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். பிள்ளைகள் மூலம் நல்ல செயல்கள் நடைபெறும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு முன் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்திலும் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தி