இன்றைய ராசிபலன் (04-12-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

93

இன்றைய ராசிபலன்…………………

மேஷம் ராசிபலன்:

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தேவையில்லாத கடன்களை சமாளிக்க கடன் வாங்க கூடும்.தொழிலில் மேலதிகாரிகள் நெருக்கடியாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

ரிஷபம் ராசிபலன்:

வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாக வாய்ப்பு இருக்கு. நண்பர்களின் ஆலோசனை நல்ல பலனைக் கொடுக்கும். பணவரவு சீராக இருக்கும்.

மிதுனம் ராசிபலன்:

உறவினர்களிடம் தேவையில்லாத மனக்கசப்பு உண்டாகும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சனை இருக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்பு உண்டாகும்.தொழிலில் சிறுசிறு மாறுதல் செய்வதனால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குழந்தைகள் மூலம் சுப செய்தி இருக்கும்.

கடகம் ராசிபலன்:

தொழில் கொடுக்கல் வாங்கல் திருப்தியை தரும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும். வீட்டில் இருந்த பிரச்சினை சுமூகமாக முடியும். உற்றார் உறவினர்களின் உதவி உண்டாகும்.

சிம்மம் ராசிபலன் :

வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக காணப்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். தொழிலில் எதிர்பாராத பிரச்சனைகள் இருக்கும்.உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் உத்தியோகத்தில் முன்னேற்றம் கிடைக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

கன்னி ராசிபலன்:

குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அனுகூல பலன் உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

துலாம் ராசிபலன்:

வீட்டில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்களிடம் இருந்த மகிழ்ச்சி தரும் செய்தி உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.உத்தியோகத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக இருந்தால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

விருச்சிகம் ராசிபலன்:

வீட்டில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகள் தீரும். சிலருக்கு வண்டி வாகனங்களால் விரயம் உண்டாகும். உத்யோ கத்தில் இருந்து எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும். திடீர் பணவரவு அமையும். தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.

தனுசு ராசிபலன்:

செய்யும் செயல்களில் தாமத நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதை உண்டாகும். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் எதிலும் நிதானம் வேண்டும்.தொழிலில் சக ஊழியர்களிடம் ஒற்றுமையாக நடந்தால் பிரச்சனைகள் தீரும்.

மகரம் ராசிபலன்:

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். பெரியவர்களின் நட்பு மனதிற்கு தெம்பு அளிக்கும். நண்பர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு செல்லும்.

கும்பம் ராசிபலன்:

அதிகாலையிலேயே ஆனந்தமான செய்தி இருக்கும். சுபகாரியம் அனுகூலப் பலனை கொடுக்கும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி கொடுக்கும். உத்தியோகம் தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மீனம் ராசிபலன்:

பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். பெரியவர்களுடன் மனஸ்தாபம் இருக்கும். வீட்டில் தேவையில்லாத வாக்கு வாதம் தவிர்த்தால் ஒற்றுமை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூல பலனை அடைய முடியும்.