இன்றைய ராசிபலன் (05-08-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

60

இன்றைய ராசிபலன்…

மேஷம்

உங்களின் பலம், பல வீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமா கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தா கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதா யம் உண்டு. திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால்அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி,உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கடகம்

எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாய மும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். அரசு காரியங் கள் நல்லவிதத்தில் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத் தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

கன்னி

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர் கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

துலாம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உற வினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலை யாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

விருச்சிகம்

எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். அரசு விவாகரங்களில் அலட்சியம் வேண்டாம். மருத்துவ செலவுகள் ஏற்படும். அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்
கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

தனுசு

எதையும் சாதிக்கும் துணிச் சல் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடு படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

மகரம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப் படைப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கும்பம்

இதுவரை இருந்த அலைச்சல் டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறை
யால் தீர்வு காண்பீர்கள். தள்ளிப்போன விஷயங் கள் எளிதில் முடியும். தொழில் உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங் கும் நாள்.

மீனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களேபார்க்க வேண்டி இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்க ளிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி யிருக்கும். நிதானம் தேவைப்படும் நாள்.