இன்றைய ராசிபலன் (09-12-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

422

இன்றைய ராசிபலன்………..

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய சிந்தனைகள் மேலோங்கி காணப்படும். உங்களுடைய முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த விஷயத்தில் அனுகூல பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். திருமண சுபகாரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லது நடக்கும். நினைத்த காரியங்கள் எல்லாம் சிக்கலை மீறி நிறைவேறும். மனதில் உறுதி பிறக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். பெண்களுக்கு நேர்மறை ஆற்றல் பெருகும். உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அரசு ரீதியான விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உங்களுக்கு எதிரான கருத்துக்களை சரியான முறையில் நிரூபித்து காட்டுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சிறு சிறு வாக்கு வாதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாய்ப்புகளை நழுவ விட்டால் மீண்டும் கிடைக்காது. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உங்கள் அனுபவம் கை கொடுக்கும். தாராள மனப்பான்மை கொண்ட நீங்கள் பிறரின் பாராட்டை பெறுவீர்கள். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்கள் தங்களுடைய கருத்துகளை சரியாக வைத்து குடும்பத்தில் நல்ல மதிப்பை சம்பாதிப்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பண ரீதியான விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனோதிடம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. நீங்கள் சாதிக்க நினைக்கும் விஷயத்தில் நல்ல தகவல்கள் வந்துசேரும். உத்தியோக விஷய பயணத்தில் அணுகூலப் பலன்கள் உண்டு. ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்த தவறை உணர்ந்து நடந்து கொள்வீர்கள். உங்களால் ஏற்பட்ட பாதிப்பை நீங்களே சரி செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் அதிருப்தி கிடைக்கும். சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களின் சொந்த முயற்சிக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைப்பதில் சிக்கல் உண்டு. தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை பொறுமையை இழக்காமல் நிதானம் காப்பது மிகவும் நல்லது. பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாக வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கூடுதல் பணியாளர்களை நியப்பதில் கவனம் தேவை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புது விதமான முயற்சிகளில் அனுகூல பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். மேல அதிகாரிகளும் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். தெய்வத்தின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் உண்டாகும். தேவையே இல்லாமல் செலவு செய்வதை தவிர்க்கவும். வீட்டில் இருப்பவர்களுக்கு தேவையான நேரத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான விஷயங்களில் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் தேவை. உங்கள் கிரக அமைப்பு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் பிரச்சனைகளை சமாளிக்க சற்று போராட நேரிடலாம். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முதுகு வலி, மூட்டு வலி போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு மறையும். பெண்கள் பிடித்த விஷயத்தில் சாதனை புரிவீர்கள்.