இன்றைய ராசிபலன் (11-10-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

401

இன்றைய ராசிபலன்….

மேஷம்

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். வளைந்து கொடுத்து செல்ல வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் பெரியபொறுப்புகள் தேடி வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சாதகமாக மாறுவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

கடகம்

கடகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். பழைய பிரச்சினையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் அனைத்தும் இனிதே முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் ராஜதந்திரத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாத படி வேலைச்சுமை இருந்துக் கொண்டே இருக்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

தனுசு: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர் நண்பர்களில் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வீண் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

கும்பம்

கும்பம்: மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதித்துக் காட்டும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. மகிழ்ச்சியான நாள்.