இன்றைய ராசிபலன் (15-08-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

229

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுகம் தரும் இனிய நாளாக இருக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் கனவுகள் நிறைவேறக்கூடிய வழிகள் தெரியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் சில மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆரோக்கியம் ஏற்றம் காணும்.

ரிஷபம்

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம். புதிய தொழில் தூங்குவதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் காணப்படும். எதையும் சமாளித்து விடலாம் என்கிற தன்னம்பிக்கை பிறக்கும். ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற எதிர்பார்ப்புகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். குடும்ப அமைதிக்கு விட்டு கொடுத்து செல்லுதல் நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். பிடித்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. –

கடகம்

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உணர்ச்சிவசப்படக் கூடிய அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற சீண்டல்களை கண்டு கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடினமான வேலையும் சுலபமாக முடியும். ஆரோக்கிய பாதிப்புகள் மெல்ல மறையும்.

சிம்மம்

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சகிப்புத்தன்மை வெற்றி அடைய செய்யும் இனிய நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சிறு சிறு சண்டைகளை ஊதி பெரிதாக்காமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் பொறுப்புகளை சரியாக செய்வீர்கள்.

கன்னி

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கேட்டது கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் ஒத்துழைப்பு தேவை.

துலாம்

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதிக்கக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் தனி திறமையை மேலும் வளர்த்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் எனவே அவற்றை தட்டிக் கழிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வீர்கள். பிரதிபலன் எதிர்பாராமல் உதவி செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை நிலுவையில் இருந்து வந்த பணிகளும் முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கிறது.

தனுசு

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கக்கூடிய இனிய நாளாக இருக்கிறது. தேவையற்ற விமர்சனங்களை பற்றிய கவலை வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் தொடர் ஏற்றம் காணலாம். மிகப்பெரிய பொறுப்புகளை சுமக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவலைகள் நீங்கும்.

மகரம்

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சுயமரியாதையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே வீண் சந்தேகங்களை தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும்.

கும்பம்

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை மறந்து செயல்படுவீர்கள். சமூக அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சி நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை இருக்கும்.

மீனம்

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சலான முடிவுகள் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் பெறுக கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு சாதக பலன் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வெளியிட பயணங்களின் போது கவனமுடன் இருப்பது நல்லது.