இன்றைய ராசிபலன் (15.09.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

685

இன்றைய ராசிபலன்…

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்க போகிறது. எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்தாலும் அதை சுலபமாக முடித்துவிட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். சொந்த தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வாரா கடன் வசூல் ஆகும்.

ரிஷபம்:

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. புதிய தொழில் தொடங்கலாம். புதுசாக முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று மனநிறைவான நாளாக அமையும். வேலை செய்யும் பெண்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. சொந்த தொழிலில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். யாரையும் நம்ப வேண்டாம்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. நிறைவு ஓய்வு எடுக்க நேரம் கிடைக்கும். பழசை நினைத்து பார்த்து சந்தோஷம் அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தாய் மாமன் உறவு வலுப்பெறும். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு இன்று எதிர்பாராத நல்லதே நடக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக செய்ய முடியாத வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்து மனநிறைவை அடைவீர்கள். பிறவி பலனை அடைந்தது போல ஒரு உணர்வு ஏற்படும். ஆன்மீக சிந்தனை நிறைந்த இந்த நாளில் கடவுளின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனது அமைதியான நிலைமையில் இருக்கும். எதை நினைத்தும் அலைபாயாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று அமைதியாக எல்லா காரியங்களையும் சாதித்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நலம் தரும் நாளாக அமையும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். மனதில் சந்தோஷம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழிலில் எந்த பிரச்சனையும் வராது. எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. அடுத்தவர்கள் உங்களை பாராட்டும் அளவுக்கு நிறைய நல்ல விஷயங்களை செய்து முடிப்பீர்கள். தற்பெருமை கூடாது. அடம்பிடித்து சில விஷயங்களை சாதித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சக ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. வாழ்க்கை துணை உங்களது மனதை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். வருமானம் அதிகரிக்கும். வாரா கடன் வசூல் ஆகும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கப் போகின்றது. கவனத்தோடு உங்களுடைய வேலையை செய்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது. மூன்றாவது மனிதர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொழுதுபோக்கு நிறைந்த நாளாக இருக்கும் வேலைக்கு சென்றாலும் அரட்டை அடிப்பீர்கள். வீட்டில் இருந்தாலும் அரட்டை அடிப்பீர்கள். நண்பர்கள் கூடி நேரத்தை வீணாக செலவு செய்யப் போகிறீர்கள். யாரிடமும் திட்டு வாங்காமல் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட முன்கோபம் வரும். உறவுகளை உதாசீனப்படுத்தாதீங்க. பொறுமையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். அரசாங்க அதிகாரிகளை தர குறைவாக பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். உடன் வேலை செய்பவர்களுடன் சண்டை போட வேண்டாம். சொந்த தொழிலை விரிவு படுத்தலாம். சொந்த தொழிலுக்கு தேவையான உதவிகளை நண்பர்களிடம் கேட்கலாம். வாகனங்களை செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டவும்.