இன்றைய ராசிபலன் (19-11-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

296

இன்றைய ராசிபலன்…………

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் உங்களிடம் உற்சாகம் குறைவாகவே இருக்கும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் எதிர்கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு முடிவு எடுக்கும் முன் பலமுறை யோசித்து விட்டு எடுப்பது மிகவும் உத்தமம். அலட்சியமாக நீங்கள் செய்யும் காரியம் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் வேலையை மட்டும் செய்தால் நிம்மதி கிடைக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க போராடுவீர்கள். நண்பர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்தமான சூழ்நிலை காணப்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கும். பணி சுமை காரணமாக சில உடல் உபாதைகளை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் கைகூடி வெற்றி தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. மனதில் நினைத்த காரியம் ஒன்று இனிதே நிறைவேறும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவால் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் நீங்கப் பெறும். குடும்பத்தில் இருக்கும் மூத்த நண்பர் களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். பெண்கள் தைரியமாக செயல்படக்கூடிய நாளாக அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை குடும்பத்தில் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஒரு சிலருக்கு வண்டி வாகன யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை தரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் பழிக்கு ஆளாக நேரலாம். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் கவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அறிவியல் ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியமாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை திறம்பட சமாளிப்பீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று பாராட்டு பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், அலைச்சல்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். பெண்கள் நினைத்ததை நடத்திக் காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். பெண்கள் நினைத்ததை நடத்திக் காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். வேலையில்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய இரக்க குணத்தால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் காலதாமதமானாலும் வெற்றி கிடைக்கும். இறை வழிபாடுகள் மூலம் மன அமைதி பெறலாம். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் சீராக்கி வரும்.