இன்றைய ராசிபலன் (20-11-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

85

இன்றைய ராசிபலன்…………

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிதாக உங்கள் வாழ்க்கையில் வந்த நபர்களின் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். பெண்கள் இறுக்கமான மனநிலையில் இருந்து சற்றே தளர்வடைந்து காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். தொழில் ரீதியான தடைகள் தகர்வதற்கு வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் சோர்வடைந்து காணப்படுவீர்கள். பணி சுமை அதிகமாக இருந்தாலும் அதை செய்வதற்கு உரிய பலம் உங்களிடம் இருக்காது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் ஓரளவுக்கு நல்ல பலன்களை கொடுக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவது அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய பலமே பலவீனமாக மாறக்கூடும் எனவே எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர சில நுணுக்கங்களை கையாளுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருப்பவர்களும் உங்களை புரிந்து கொள்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே சிறப்பான புரிதல் உண்டாகும். தொழில் தொழில் ரீதியான கொடுக்கல் வாங்கல் சற்று எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் பாராட்டுகள் கிடைக்கப்பெறும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல எண்ணங்கள் மேலோங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. இறை வழிபாடுகள் மூலம் மன அமைதி பெறுவீர்கள். சமூகத்தின் மீதான உங்களுடைய அக்கறை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு புதிய பொருள்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்தவை நினைத்தபடியே நடைபெற வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியான விஷயத்தில் புதிய நபர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் நீங்குவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகும். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருக்காமல் மற்றவர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுப்பது நன்மை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் பலமாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. வீண் விரயங்களை சந்திக்க கூடிய நாளாக இருப்பதால் செலவு செய்யும் முன் சற்று யோசித்து முடிவு எடுப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் சில இடையூறுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு இடையே மனக்கசப்புகள் வந்து மறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அமைதியாக சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் தொந்தரவு குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதிலும் நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் உங்களுடைய மனதை தளர விடாதீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்து வந்த போட்டிகள் சாதகமான பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற விஷயங்களில் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியாக கடந்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இனிய செய்திகள் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் மற்றவர்களை நம்புவதை தவிர்ப்பது உத்தமம். வீண் விரயங்களை சுப விரயமாக மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொட்டதெல்லாம் ஜெயமாக மாறும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் நினைத்த காரியம் ஒன்று நல்லபடியாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். தொழில்முறை போட்டி பொறாமைகள் குறைந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாக வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான பயணத்தில் எச்சரிக்கை தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். வாகன ரீதியான பயணத்தில் கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அதிக தொகையை ஈடுபடுவதில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்படும்