இன்றைய ராசிபலன் (22-07-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

722

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு தொழில் நிமித்தமாக திடீரென வெளியிடம் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பெரியவர்களிடம் மாற்று கருத்துக்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு எதிலும் ஆர்வம் குறைந்து காணப்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். வெளியிட பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் சாதகமான பலன்கள் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். சொத்து சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பிள்ளைகள் எதிலும் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் பணிசுமை குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். ஆடம்பரத்தை குறைப்பது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் ஆடம்பரத்தை குறைத்து கொள்வது நல்லது. உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கி எதிர்பார்த்த லாபம் கிட்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்க்கவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் சீராக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப உறவுகளிடம் நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். நிம்மதி இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் வியாபார ரீதியான திடீர் வெளியிட பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆடம்பர தேவைகளை குறைத்து கொள்வது நல்லது. சேமிப்பு குறையலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் ரீதியான திடீர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.