இன்றைய ராசிபலன் (24.05.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

1037

இன்றைய ராசிபலன்..

மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும் நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பிறர் உதவி தேவைப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய பொறுப்புகளை ஏற்பதற்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேற கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய அனுபவங்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே புரிதல் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தது நடக்கும்.

கடகம்

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தள்ளி சென்ற காரியங்கள் வெற்றி அடையக்கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம்

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த உரிமைகளை பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் மலர கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலைச்சலால் டென்ஷன் ஏற்படும்.

கன்னி

கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மகிழ்ச்சிக்கு குறைவில்லாத நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே புதிய பரிமாற்றம் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உற்சாகம் பற்றிக் கொள்ளக்கூடிய நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளுடன் இணக்கமுடன் செல்லுங்கள்.

துலாம்

துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த நபர் ஒருவரை சந்திப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. சுக துக்கங்களை மற்றவர்களிடம் தேவையில்லாமல் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் முயற்சி இடையூறுகளை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிம்மதி தேவை.

விருச்சிகம்

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் போராடி தான் எதையும் பெற வேண்டி இருக்கும் எனவே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சண்டை வரக்கூடும் கவனம் வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பலவீனத்தை உணரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை பற்றி சிந்திப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.

மகரம்

மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நிம்மதியாக இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நிதானத்தை கையாள வேண்டும்.

கும்பம்

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றியடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுப காரிய முயற்சிகளில் இருந்து வந்த மந்த நிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்ததை அடையக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற பகையை வளர்க்காதீர்கள்.

மீனம்

மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிரடியான முடிவுகள் எடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நன்மதிப்பு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆன்மீக விஷயங்களில் கூடுதல் அக்கறையுடன் காணப்படுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here