இன்றைய ராசிபலன் (30-11-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

90

இன்றைய ராசிபலன்……

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத நபர்களின் வருகையால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பொருளாதாரத்தில் இருக்கும் சவால்களை சமாளிக்க புதிய வழிகள் பிறக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தின் மூச்சு தொடர்பான பிரச்சினைகள் தொந்தரவு தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிரிகளாக மாறும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக சோர்வு இருக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆரோக்கியத்தில் அஜீரணப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் இதுவரை நினைத்துக்கூட பார்க்க முடியாத வகையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதுவரை இருந்துவந்த கடன் தொல்லைகள், பகைவர்கள் பிரச்சனை போன்றவை நீங்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன்கள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஆனாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். மனதிற்குப் பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிரிந்துசென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவதற்கு சந்தர்பங்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.சுயதொழில் இருப்பவர்களுக்கு நினைத்ததை முடிக்க கூடிய அற்புதமான நாள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை நடத்தி காட்ட நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிலிருக்கும் மூத்தவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே புதிய புரிதல் உண்டாகும். தொழில் செய்பவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிப்பது தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைகளில் கால தாமதம் ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் தரப்பு நியாயங்களை நீங்கள் முன்வைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். பூமி, வீடு போன்ற விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வியாபாரம் செய்பவர்கள் சில போராட்டங்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு நல்ல நாளாக அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பை மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நண்பர்களின் வருகை உற்சாகத்தை ஏற்படுத்தும்.

தனுசு

தனுசு ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் பிடிவாத குணம் தளரும் வாய்ப்புகள் உண்டு. அதிகம் முன் கோபப்படும் நீங்கள் சில இடங்களில் பொறுமையை கையாள நேரலாம். கணவன் மனைவிக்கு இடையே வாக்கு வாதங்கள் தோன்றி மறையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக பணியாளர்களுக்கு இடையே போட்டி கள் வலுவாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைபட்ட காரியங்கள் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில உள்ளார்ந்த விஷயங்களை புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான மாற்றம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவாலான விஷயங்களை எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான விஷயங்கள் காலதாமதம் ஆகலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்கள் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரத்தை சீராக்க முடியும். உங்களுடைய தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. பிள்ளைகளால் உள்ளம் மகிழும்.