இளம்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்… வசமாக சிக்கிய தந்தை : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

628

பெங்களூரூவில்..

பெங்களூரூவில் இளம்பெண் உயிரிழப்பில் திடீர் திருப்பமாக அவரது தந்தை கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரூவைச் சேர்ந்த இளம்பெண் ஆஷா.

இவர் ஆடை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவனை கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்த்து வந்தார்.

பெற்றோருடன் வசித்து வந்தாலும், அவர்களை மதிக்காமல் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதால், ஆஷாவுக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

வயதானவர்கள் என்று கூட பாராமல் ஆஷா, தனது பெற்றோரை அடிக்கடி அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. வழக்கம் போல தனது தந்தை ரமேஷுடன் சண்டையிட்டு விட்டு இரவில் தனது ரூமில் ஆஷா உறங்கச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர்களது பெற்றோரும் போலீஸில் மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, ஆஷா உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மகளுடன் ஏற்பட்ட சண்டையில் ஆஷாவை, இரவு தூஙகும் போது அவரது தந்தை ரமேஷ் விறகு கட்டையால் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதனை அவரும் ஒப்புக்கொண்டார். பெற்ற மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.