யூடியூப்பில்..
எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த நபர் ஒருவர் வீடியோ ஒன்றை பார்த்ததன் மூலம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்தவர் பவாராம். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தொழிலாளியாக சொற்ப சம்பளத்தில் வேலை செய்து வந்தார்.
வருமானம் மிக குறைவாக வந்த வேலையை விட்டுவிடலாம் என அவர் நினைக்கும் போதெல்லாம் இந்த வேலையையும் விட்டால் வாழ்வாதாரத்துக்கு என்ன செய்ய முடியும் என நினைத்து தொடர்ந்து அந்த வேலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் யூடியூப்பில் பவாராம் எதேச்சியாக பார்த்த வீடியோ அவரை கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது. ஆம்! தைவானின் ரெட் லேடி வகை பப்பாளி சாகுபடி பற்றிய வீடியோ தான் அது! அதிக விளைச்சல் தரும் பப்பாளி வகைகளில் இதுவும் ஒன்று.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
அதுவும் குறைந்த செலவில் நல்ல லாபம் பார்க்கலாம். இதையடுத்து களத்தில் உற்சாகத்துடன் இறங்கினார் பவாராம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2.5 ஏக்கரில் பப்பாளி சாகுபடியை தொடங்கினார்.
தண்ணீர் பயன்பாட்டை குறைக்க சொட்டுநீர் முறையை பின்பற்றினார். இதோடு கரிம உரங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பிறகு, ஆறு மாதங்களுக்குள் பயிர் அறுவடை செய்யப்பட்டது.
விளைச்சல் நினைத்ததை விட அதிகமாக பணம் கொட்ட தொடங்கியது பவாராமுக்கு. இந்த வகை பப்பாளியின் சுவையை மக்கள் விரும்புவதால், ஒரு நாளைக்கு 5 குவிண்டால் வரை பப்பாளி விற்பனை செய்வதாக அவர் கூறுகிறார்.
வெறும் 25 ரூபாய் விலையுள்ள ஒரு செடி தன்னை எதிர்பாராமல் பணக்காரராக்கிவிட்டதாக சொல்கிறார் பவாராம். பவாராமின் வெற்றிக்கதையை அறிந்த பல விவசாயிகள் அவரிடம் ஆலோசனை பெற்றுள்ளனர்.