ஏற்கனவே மூன்று திருமணம்.. நான்காவதாக பெண் பார்க்கும் மனைவிகள்; கணவனின் நிபந்தனை என்ன தெரியுமா?

95

அட்னான்………

20 வயது இளைஞர் ஒருவருக்கு அவரது மூன்று மனைவிகள் சேர்ந்து நான்காவது திருமணத்துக்காக பெண் பார்த்து வருகிற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்தவர் அட்னான்(20). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று மனைவிகள் உள்ளனர்.

முதல் திருமனம் 16 வயதில் அவர் பள்ளியில் படிக்கும் போதே நடந்துள்ளது. அதன் பின்னர் 3 ஆண்டுகழித்து ஒரு திருமணமும் கடந்த ஆண்டு ஒரு திருமணமும் நடந்துள்ள நிலையில் இப்போது நான்காவதாக ஒரு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதற்கு அவரின் மூன்று மனைவிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களே அவருக்கு பெண் பார்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த மனைவிகள் இப்படி இருக்க காரணம் என்ன என்பதை படித்தபோது, அட்னான் தனது 3 மனைவிகளையும் சமமாக நேசிக்கிறார் என்றும் மனைவிகளும் அவரை அதே அளவில் நேசிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

மூன்று மனைவிகளும் வீட்டு வேலைகளை தனித்தனியாக பிரித்துக் கொள்கிறார்கள். ஒரு மனைவி சமைக்கிறார். இரண்டாவது மனைவி துணிகளை துவைப்பது , மூன்றாவது மனைவி கணவனின் ஷூக்களுக்கு பாலிஷ் போடுவது.

மேலும், மூன்று மனைவிகளும் தங்களுக்குள் இதுவரை எந்த புகாரும் தெரிவித்ததில்லை. ஆனால், அட்னான் மீது அவர்களுக்கு உள்ள புகார் என்னவென்றால் மனைவிகள் ஒவ்வொருவரிடமும் போதுமான நேரத்தை அவர் செலவிடுவதில்லையாம்.

இதில், நான்காவது திருமணம் வேறு என்று தானே நினைக்கிறீர்கள்? சரி இவர்களது வீட்டில் அறைகள் எப்படி இருக்கும் என்று பார்த்தால், அதில் 6 படுக்கையறைகள், ஒரு ஓவியம் அறை மற்றும் ஒரு ஸ்டோர்ரூம் உள்ளதாம்.

குடும்ப செலவு மட்டுமே ஒரு மாதத்திற்கு 1.5 லட்சம் செலவாகிறதாக அட்னான் கூறுகிறார். மேலும், மூன்று மனைவிகளின் முதல் எழுத்தும் s-ஸில் ஆரம்பிப்பதால் நான்காவது மனைவிக்கும் அதே போல பேர் வேண்டும் என்ற நிபந்தனையும் வைத்திருக்கிறார் அட்னான்.