ஒரே வருடத்தில் 45 கிலோ உடல் எடையை குறைத்த பெண் மரணம்.. அவரை பின்பற்றுவோர் அதிர்ச்சி!!

299

அட்ரியானா தைசென்..

பிரேசில் நாட்டை சேர்ந்த அட்ரியானா தைசென் என்ற ஃபிட்னஸ் மாடல் ஒரே வருடத்தில் 45 கிலோ எடையை குறைத்து இருந்த நிலையில் அவர் தற்போது தன்னுடைய 49வது வயதில் திடீரென உயிரிழந்துள்ளார். 100 கிலோ எடையுடன் தனது 39 வயதில் அவதிப்பட்டு வந்த போது அவருக்கு எடையிழப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

அதன் பிறகு பல்வேறு எடை குறைப்பு சாத்தியங்களையும் டயட் முறைகளையும் ஆராய்ந்து இறுதியில் பலவற்றையும் கலந்து கட்டிய புதுவித பயிற்சி முறைகளை அட்ரியானா தைசென் உருவாக்கியுள்ளார்.

இந்த முறையை பயன்படுத்தி தனது தீவிரமான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு ஒரே வருடத்தில் 45 கிலோ உடல் எடையையும் குறைத்து வெற்றி பெற்றுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அட்ரியானா தைசென் தனது உடல் எடை குறைப்பு முறை மற்றும் அனுபவங்களை பக்க விளைவுகள் ஏதுமற்றதாக உலகிற்கு பிரசாரமும் செய்ய தொடங்கினார்.

அதனடிப்படையில் பிரேசில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அட்ரியானா தைசென் உருவாக்கிய உடல் எடை குறைப்பு முறையை பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில் அட்ரியானா தைசெனின் திடீர் மரணம் நிகழ்ந்து இருக்கிறது. அட்ரியானா தைசெனின் உயிரிழப்பை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில் அவரது திடீர் மரணம், அட்ரியானா தைசென் அறிமுகப்படுத்திய உடல் எடை குறைப்பு முறையை பின்தொடர்பவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.