கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த மனைவிக்கு நேர்ந்த துயரம்!

814

இந்தியாவில் கணவனே, மனைவியை எரித்து கொன்றுவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவின், Basanti-யில் உள்ள Palbari கிராமத்தில் வசிக்கும், Tanushree என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு Dudhkumar என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார். Dudhkumar நர்சிங் ஹோம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். திருமணம் முடிந்த ஓரிரு ஆண்டுகள் இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுள்ளது. இந்நிலையில் தான் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை மனைவி Tanushree அறிந்துள்ளார்.

ஒருவருடத்திற்கு மேலாக அந்த பெண்ணுடன் இவர் பழக்கம் வைத்து வந்துள்ளார். இதனால் இது குறித்து கேட்ட போது, கணவன்-மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனைவி Tanushree தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்படி இவர்களுக்குள் மீண்டும் பிரச்சனை வர கடந்த 9-ஆம் திகதி மீண்டும் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அப்படி கடந்த 9-ஆம் திகதி தந்தையின் வீட்டிற்கு புறப்பட்ட போது, கணவரின் குடும்பத்தினர் தீ வைத்து எரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, அவர் கேனிங் துணைப்பிரிவு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கேனிங் மருத்துவமனையில் ஓரிரு நாட்களுக்குப் பிறகு, நோயாளியின் நிலை மோசமடைந்துவிட்டால் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லும் படி கூறியுள்ளனர். இதையடுத்து, Basanti-யில் உள்ள ஒரு நர்சிங் ஹோமுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் தனுஸ்ரீ செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதனால் மகளை இழந்த வேதனையில் அவரின் தந்தை செவ்வாய் கிழமை இரவு, அங்கிருக்கும் காவல்நிலையம் ஒன்றில் மருமகன் மற்றும் மாமியார் மீது புகார் கொடுக்க, உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பொலிசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.