கல்யாணம் ஆகி ஒன்றரை மாசம்தானே ஆச்சு.. அதுக்குள்ள 4 மாசம் கர்ப்பமா? தலையில் அடித்து கதறிய கணவன்!!

1878

உத்தரபிரதேசம்..

திருமணமாகி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில் மனைவி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கணவன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தனது மனைவியும் மாமியாரும் சேர்ந்து தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஏமாற்றிவிட்டதாக அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.

திருமணம் மற்றும் திருமணம் மோசடி சார்ந்த புகார்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. 1000 பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்தாலும் திருமணத்தில் பின்னர் உண்மை சம்பவங்கள் வெளியில் வர ஆரம்பிக்கின்றன, அது பலநூறு கனவுகளுடன் திருமண வாழ்க்கையை எதிர் கொண்டவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. அப்படியான ஒரு சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் மகராஜ் கஞ்சி பகுதியில் நடந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இளம் தம்பதியருக்கு திருமணம் நடந்தது.

இந்நிலையில் பெண் வயிற்றுவலி இருப்பதாக கூறிய நிலையில் கணவன் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அந்தப் பெண் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர், இதைக் கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்,

இந்த விஷயம் அறிந்த கணவன் அந்த பெண்ணை அங்கேயே விட்டுச் சென்றார், அங்கு வந்த அவர் அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் சமாதானம் செய்து மகளை கணவருடன் சேர்த்து வைக்க முயற்சித்தனர். ஆனால் தன்னையும் தனது குடும்பத்தாரையும் மாமியார் குடும்பத்தினர் ஏமாற்றி விட்டனர் என அவர் கணவர் காவல்துறையில் புகார் கொடுத்தார்.

இது குறித்து தெரிவித்த கணவர், பக்கத்து மாவட்டத்தைச் சார்ந்த பெண்ணுடன் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்தி வைத்தனர், உறவினர்கள் மூலமாக நன்கு ஆராய்ந்து விசாரித்தே திருமணம் நடந்தது. எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து திருமணம் நடந்தது.

இந்நிலையில் குடும்ப வாழ்க்கையில் நுழைவதற்கு முன்பாகவே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது, மனைவி மாமியார் குடும்பத்தினர் திட்டமிட்டு என்னை ஏமாற்றி விட்டனர் என கணவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மகள் கர்ப்பமாக இருப்பது பெண்ணின் பெற்றோர்களுக்கு ஏற்கனவே தெரியும், ஆனால் உண்மையை மறைத்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும் மணமகன் குற்றம்சாட்டியுள்ளார். இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.