கள்ளக் காதலிக்காக சுடுகாட்டில் கொலை…. மயங்கிய இன்ஸ்டா குயின் : நடந்த விபரீதம்!

1478

பண்ருட்டி..

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு விவகாரத்தில் கள்ளக்காதலி, எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காந்தி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல், 26. ஆட்டோ டிரைவர்.

இவரது நண்பர் களத்துமேடு ஆட்டோ டிரைவர் சுமன், 23.அங்கு செட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி பூமிகா, 22; இவர், ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளத்தில் சினிமா நடிகை போல் பாடல்களை பதிவிட்டு வந்தார்.

இதனால், பிரகாஷ் – பூமிகா தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த பூமிகா, பண்ருட்டிக்கு ஆட்டோவில் பேக்கரி கடைக்கு வேலைக்கு, செல்லும் போது, சக்திவேல், சுமன் ஆகியோரிடம் பழக்கம் ஏற்பட்டது.

பூமிகாவுடன் சக்திவேல் தொடர்பில் இருப்பதை அறிந்த சுமன், சக்திவேலுவை கண்டித்தார். இதற்கு சக்திவேல் எதிர்ப்பு தெரிவித்ததால், 9ம் தேதி, மது அருந்த சுமன் அழைத்துச் சென்று, நண்பர்களுடன் சேர்ந்து சக்திவேலை வெட்டி கொலை செய்தார்.

புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சுமன் உட்பட நான்கு பேரை கைது செய்து, மேலும் இருவரை தேடுகின்றனர். இந்நிலையில் பூமிகா எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

அவரை மீட்டு விழுப்புரம், முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீசாரும், விழுப்புரம் தாலுகா போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.